மேலும் செய்திகள்
லெமன் பட்டர் குக்கீஸ் செய்வோமா?
16-Aug-2025
கடைகளில் கிடைக்கும் பிரட், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். சமீப நாட்களாக மார்க்கெட்களில் பிரவுன் பிரட், கோதுமை பிரட், ஷுகர் லெஸ் பிட், மைதா பிரட் என பல வகையான பிரட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இத்தகைய பிரட்கள் நல்லதா, பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழும். சந்தேகத்துடன் கடைகளில் பிரட் வாங்கி, பயந்து கொண்டே சாப்பிடுவதை விட, நாமே வீட்டில் சுவையான, ஆரோக்கியமான பிரட் தயாரிக்கலாம். செய்முறை முதலில் வாழைப்பழத்தை தோல் உரித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு பிசையவும். இதில் சர்க்கரை, பால், எண்ணெய், வெனிலா எசென்ஸ், வினிகர் சேர்த்து நன்றாக பிசையவும். மைக்ரோ ஓவனில் சமைக்க பயன்படுத்தும் அகலமான கிண்ணத்தில், கோதுமை மாவு, பேக்கிங் சோடா, உப்பு, ஜாதிக்காய் போட்டு பிசையவும். இதில் பொடித்த வால்நட்ஸ், ஓட்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் கூடுதலாக வால்நட்சை சேர்க்கலாம். இக்கலவையில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள வாழைப்பழ கலவையை சேர்த்து நன்றாக பிசையவும். இந்த கலவையை மைக்ரோ ஓவனில் வைத்து, 45 முதல் 50 நிமிடங்கள் வேக வைக்கவும். பிரட் வெந்துள்ளதா என்பதை டூத் பிக் பயன்படுத்தி குத்தி பார்க்கலாம். நன்றாக வெந்த பின், வெளியே எடுக்கவும். ஓரளவு ஆறிய பின், துண்டுகளாக்கி சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாது. விருப்பம் உள்ளவர்கள் ஜாம், தக்காளி சாஸ் தடவி சாப்பிடலாம். இந்த பிரட் ஒரு வாரம் வரை கெடாது; காலை டிபன், மாலை நேர டிபனுக்கு ஏற்றது. குட்டீஸ்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். - நமது நிருபர் -
16-Aug-2025