உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / சுவையான டைமண்ட் சிப்ஸ்

சுவையான டைமண்ட் சிப்ஸ்

கோதுமை மாவில், சப்பாத்தி மட்டுமின்றி, சுவையான பலகாரமும் செய்யலாம். கோதுமை மாவுடன் சில பொருட்களை சேர்த்தால், 'டைமண்ட் சிப்ஸ்' தயாரிக்கலாம். செய்முறை கோதுமை மாவில் உப்பு, மிளகாய் துாள், சர்க்கரை சேர்த்து கையால் பிசையவும். அதில் சீரகம் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அதன் மீது எண்ணெய் தடவி 15 நிமிடம் மூடி வைக்கவும். அதன்பின் மாவை மீண்டும் மிருதுவாக பிசையவும். உருண்டைகளாக்கி சப்பாத்தி கல்லில் மாவை போட்டு திரட்டவும். அதிகம் தடிமனாகவோ, மெல்லியதாகவோ இல்லாமல் தட்டவும். கத்தியால், மாவை டைமண்ட் வடிவத்தில் வெட்டி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும் மிதமான தீயில் வைத்து, வெட்டி வைத்துள்ள மாவை போட்டு பொறித்து எடுத்தால், டைமண்ட் சிப்ஸ் தயார். மாலை நேரம் காபி, டீயுடன் சாப்பிட தகுந்தது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை