உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / பலாப்பழத்தில் சுவையான பாயசம்

பலாப்பழத்தில் சுவையான பாயசம்

மரத்தில் விளையும் பழங்களிலேயே மிகவும் பெரிய பழம் என்ற பெருமை பலாப்பழத்திற்கு உண்டு. இந்த பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தை மேம்படுத்துகிறது. எலும்புகளை வலுவடைய செய்வதுடன், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. பலாப்பழத்தின் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கணைய செல்களை மேம்படுத்துவதுடன், நீரிழிவு உள்ளவர்களுக்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் பல நன்மைகளும் பலாப்பழத்தில் உள்ளன. சுவையாக இருக்கும் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவர். பலாப்பழத்தில் சுவையான பாயசமும் செய்யலாம்.

செய்முறை

பலாப் பழத்திற்குள் இருக்கும் கொட்டைகளை நீக்கிவிடவும். பழத்தை மட்டும் சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து, பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். சூடு குறைந்ததும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்கு கரைந்ததும், வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, தேங்காய், பிஸ்தாவை வறுத்து வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி, நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், ஏற்கனவே மிக்ஸியில் அரைத்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலக்காயை இடித்து பவுடராக்கி, தேங்காய் 2ம் பால் ஊற்றி நன்கு கொதி வந்ததும், மீண்டும் முதல் தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா சேர்த்து இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான இனிப்பான பலாப்பழம் பாயசம் தயார்.-- சி.பிரபு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை