மாலை நேர கேரளம் மடக்கு ஸ்நாக்ஸ்
- நமது நிருபர் -: கேரளம் மடக்கு ஸ்நாக்ஸ் என்பது மைதா, சர்க்கரை, நெய் கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய மொறுமொப்பான இனிப்பு வகை. இது, கேரள பேக்கரிகளில் மிகவும் பிரபலம். தேவையான பொருட்கள் மைதா மாவு - அரை கப் சர்க்கரை - முக்கால் கப் பட்டர் - 2 ஸ்பூன் மஞ்சள் துாள் - 1 ஸ்பூன் தண்ணீர் - அரை கப் ஏலக்காய் - 4 எண்ணெய் - பொரிப்பதற்கு பேஸ்ட் போன்று குழைக்க... அரிசி மாவு - 3 ஸ்பூன் மைதா - 2 ஸ்பூன் நெய் - 4 டேபிள் ஸ்பூன். செய்முறை: மைதா உடன் உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து நன்றாக கலந்து, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். பின், அதை கவர் கொண்டு சுற்றி, ஒரு மணி நேரம் ஊறவிடவும் பேஸ்ட் போன்று குழைக்க அரிசி மாவு, மைதா உடன் நெய்யை உருக்கி ஊற்றி, நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு சிறிது கொதித்ததும், இடித்த ஏலக்காய் சேர்த்து நன்றாக கலந்து சரியான பதம் வந்ததும், இறக்கவும் பிசைந்த மாவை மீண்டும் நன்கு பிசைந்து மூன்று உருண்டைகளாக பிரித்து கொள்ளவும் பின் அதை நீளவாக்கில் உருட்டி கொள்ளவும் பேஸ்ட்டை பரவலாக தடவி கொண்டு ஓரத்தில் இருந்து பாயை சுருட்டுவது போல் சுருட்டவும். ஒவ்வொரு லைனுக்கும் நன்கு அழுத்தி விட்டு பின் உருட்டவும். சின்ன துண்டுகளாக கட் செய்து இரண்டு புறமும் மீண்டும் தேய்க்கவும் சூடான எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். இளஞ்சூட்டில் இருக்கும் சர்க்கரை பாகில் போட்டு ஊறவிடுங்கள். இரண்டு புறமும் புரட்டி விட்டு எடுத்து தனியாக அடுக்கினால் கேரளத்தின் மடக்கு தயார்.