மேலும் செய்திகள்
காரைக்குடி ஸ்டைலில் வெஜ் கறி
07-Feb-2026
தேவையான பொருட்கள் l காராமணி - கால் கப் l பரங்கிக்காய் - அரை கப் l வெள்ளை பூசணிக்காய் - கால் கப் l சேப்பம்கிழங்கு - கால் கப் l பச்சை மிளகாய் - 2 l கறிவேப்பிலை - தேவையான அளவு l தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் l ஒன்னாம் தேங்காய் பால் - ஒரு கப் l இரண்டாம் தேங்காய் பால் - ஒரு கப் 'ஒன்றாம் தேங்காய் பால்' என்றால் துருவிய தேங்காயில் தண்ணீர் சேர்க்காமல் அல்லது மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து முதன்முதலில் பிழிந்து எடுக்கப்படும் அதிக கொழுப்பு மற்றும் கெட்டித்தன்மை கொண்ட பால் ஆகும். இரண்டாம் தேங்காய் பால் என்றால், முதல்முறை தேங்காய் துருவலை பிழிந்து பால் எடுத்த பிறகு, மீதமுள்ள தேங்காய் சக்கையுடன் மீண்டும் வெந்நீர் சேர்த்து பிழிந்து எடுக்கப்படும் மென்மையான அல்லது நீர்த்த பால் ஆகும். செய்முறை l முதலில் காராமணி பயரை குக்கரில் வேகவைத்து கொள்ளவும். l மற்ற காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். l ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, அதில் இரண்டாம் பால் சேர்த்து, நறுக்கிய காய்கறிகள் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து வேக விடவும். l நன்றாக வெந்ததும் அதில் வேக வைத்த காராமணி பயறு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். கடைசியாக முதல் தேங்காய் பால் சேர்த்து கிளறி, கறிவேப்பிலை கிள்ளி போட்டு, மேலே தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் சுவையான ஓலன் தயார். இதனை சாதம், தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். அதிக காரம் இல்லாமல், தேங்காய் பாலுடன் செய்யும் ஓலன், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. குறிப்பு: முதல் தேங்காய் பால் சேர்த்து, ரொம்ப கொதிக்க விடக்கூடாது. காய்கறிகளை பெரிதாக நறுக்கக்கூடாது.
07-Feb-2026