உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / குளிருக்கு இதமான பூண்டு சாதம்

குளிருக்கு இதமான பூண்டு சாதம்

- நமது நிருபர் - ஹோட்டல், ரெஸ்டாரென்ட்களில் நறுமணம் வீசும், காரசாரமான 'கார்லிக் ரைஸ்' என்றால், பலரும் விரும்பி சாப்பிடுவர். இதை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்; ஹோட்டல் சுவையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

l வேக வைத்த சாதம் - 2 கப் l பூண்டு - 15 பற்கள் l வெங்காயம் - 1 l நறுக்கிய கேரட், பீன்ஸ், குடமிளகாய் - கால் கப் l வெங்காயத்தாள் - சிறிதளவு l மிளகு துாள் - அரை ஸ்பூன் l சோயா சாஸ் - 1 ஸ்பூன் l சில்லி சாஸ் - 1 ஸ்பூன் l எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் l வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் l உப்பு - தேவையான அளவு l பச்சை மிளகாய் - 2

செய்முறை:

முதலில், 10 பூண்டு பற்களை, மிகவும் சிறிதாக நறுக்கவும். மிச்ச பூண்டுகளை நசுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் மற்றும் வெண்ணெயை ஊற்றவும். சூடானதும் நறுக்கிய மற்றும் நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். அதன்பின், சிறிதாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் போடவும். கருகி போகாமல் வதக்கவும். இதில், சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அதன்பின் ஆறிய சாதத்தை போட்டு கிளறவும். சாதம் நன்றாக ஆறியிருப்பது அவசியம். சூடான சாதத்தை சேர்த்தால், களி போன்று ஆகிவிடும். அதில், நறுக்கிய வெங்காயத்தாள், ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால் கமகமக்கும் பூண்டு சாதம் தயார். மீந்து போன சாதம் இருந்தாலும், பூண்டு சாதம் செய்யலாம். புதிதாக வடித்தும் செய்யலாம். இதை தயாரிக்க 10 நிமிடம் போதும். குளிருக்கும் இதமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !