மேலும் செய்திகள்
கேரளா ஸ்பெஷல் 'உப்பிலிட்ட நெல்லிக்காய்'
13-Dec-2025
குழந்தைகளுக்கு மதியம் கொடுத்து அனுப்பும் சாதம் வகைகளை, சாப்பிடாமல் அப்படியே மாலை வீட்டுக்கு கொண்டு வந்து விடுவர். அவர்களுக்கு பிடித்தபடி சமையல் சமைத்து கொடுக்க, பச்சை பயிறு சப்பாத்தி சிறந்தது. தேவையான பொருட்கள் • பச்சைப்பயிறு - 2 கப் • மிளகாய் - 2 • சீரகம் - 2 டீஸ்பூன் • கோதுமை மாவு - 2 கப் • உப்பு - சுவைக்கு ஏற்ப • தண்ணீர் - போதுமான அளவு செய்முறை • முதலில் பச்சைப் பயறை, தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். • இதையடுத்து ஊற வைத்த பச்சைப்பயறு, இரண்டு மிளகாய் மற்றும் 2 டீஸ்பூன் சீரகம் போன்றவற்றை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். நைஸாக அரைத்த பின் ஒரு பவுலில் மாற்றி கொள்ளவும். • பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பச்சைப் பயறு கலவையை ஊற்றி நன்கு பிசைந்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்துக் கொள்ளவும். • சிறிய சிறிய உருண்டையாக்கி சப்பாத்தி கட்டையில் தேய்த்து எடுக்கவும். இறுதியாக தோசைக்கல்லை சூடேற்றி தேய்த்து வைத்த மாவை சுட்டெடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பச்சைப் பயறு சப்பாத்தி தயார் - நமது நிருபர் -: .
13-Dec-2025