சின்ன வெங்காயத்துடன் துவையல் அரைத்தால் சுவை அள்ளும்!
- நமது நிருபர் - பால் அல்வா தயாரிக்கும் போது சிறிதளவு கோகோ பவுடர் சேர்த்து கிளறினால், சாக்லேட் சுவையுடன் கூடிய பால் அல்வா தயாராகிவிடும். அடை தயாரிக்கும் போது சிறிதளவு சோளமாவை சேர்த்தால், அடை மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும் கோதுமை வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிதளவு வெந்தயம் போட்டு வைத்தால், பூச்சிகள் அண்டாமல் இருக்கும் சர்க்கரை பொங்கல் செய்து இறக்கியதும், ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறினால் மணமும், சுவையும் அதிகரிக்கும் துவையல் தயாரிக்கும் போது, சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும் முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, முள்ளங்கியை சிறிது எண்ணெய்யில் நன்றாக வதக்கி எடுத்து பின் சாம்பார் வைத்தால், முள்ளங்கியின் சுவை மேலும் அதிகரிக்கும். சாம்பாரும் ருசியாக இருக்கும் பஜ்ஜி தயாரிக்கும் மாவில் ஒரு கரண்டி தோசை மாவு சேர்த்தால் உப்பலாகவும் மொறு மொறுப்பாகவும் இருக்கும் தோசை கல்லில் சிறிது உப்பு தண்ணீர் தெளித்துவிட்டு தோசை ஊற்றினால், தோசை நன்றாக வரும் வெண்டைக்காய் வதக்கும் போது மூன்று டீஸ்பூன் புளித்த மோர் சேர்த்தால், பிசுபிசுப்பு குறைந்து சுவையாக இருக்கும் பருப்பு உருண்டை குழம்புக்கு உருண்டை பிடிக்கும் போது, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து உருட்டினால், குழம்பில் உருண்டைகள் கரையாமல் இருக்கும்.