உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / உடலுக்கு ஆரோக்கியமான கற்பூரவல்லி பஜ்ஜி

உடலுக்கு ஆரோக்கியமான கற்பூரவல்லி பஜ்ஜி

உடலுக்கு ஆரோக்கியமான கற்பூரவல்லி பஜ்ஜியை எப்படி செய்வது என்பதை பார்ப்போமா. இந்த பஜ்ஜியை சாப்பிட்டால் சளி தொல்லை குணமாகும்.

செய்முறை

முதலில் கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் நன்கு கழுவவும். கழுவிய இலைகளின் காம்புகளை நீக்கி, ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.பின் மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் துாள், பெருங்காய துாள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இந்த கலவையில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி போடும் மாவின் பதத்திற்கு பிசையவும். இந்த மாவு கலவையில் இலைகளை போட்டு வைத்து கொள்ளவும். இதையடுத்து, வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். சூடான பின், மாவில் கிடக்கும் கற்பூரவல்லி இலைகளை எண்ணெயில் போடவும்.இவை, நன்கு பொரிந்தவுடன் அதை எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வைக்கவும். அவ்வளவு தான் கற்பூரவல்லி பஜ்ஜி தயார்.இதை சட்னி, சாம்பார் எதுவும் இல்லாமல் அப்படியே தொட்டு சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை