உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா சால்னா

ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா சால்னா

- நமது நிருபர் -: ஹோட்டலில் தயாரிப்பது போல, பரோட்டா சால்னாவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். இதற்கு அதிக நேரம் தேவைப்படாது. சுவையும் பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

l சோம்பு 1 டீஸ்பூன் l சீரகம் 1 டீஸ்பூன் l பிரியாணி இலை 3 l பெரிய வெங்காயம் 2 l பச்சை மிளகாய் 3 l கறிவேப்பிலை ஒரு கொத்து l இஞ்சி, பூண்டு விழுது 2 டீஸ்பூன் l புதினா ஒரு கைப்பிடி l கொத்தமல்லி ஒரு கைப்பிடி l தக்காளி 2 l மல்லி துாள் 1 டீஸ்பூன் l மிளகாய் துாள் 2 டீஸ்பூன் l மஞ்சள் துாள் 1/4 டீஸ்பூன் l கரம் மசாலா 1 டீஸ்பூன் l உப்பு தேவையான அளவு l தேங்காய் 1/4 மூடி l முந்திரி 6 l பட்டை 1 l ஏலக்காய் 2 l எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில், குக்கரில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், பட்டை, சோம்பு, சீரகம், பிரியாணி இலைகளை போட்டு லேசாக வதக்கவும். இதில், நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயத்தின் நிறம் பொன்னிறமாக மாறியவுடன், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில், புதினா, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, மல்லி துாள், மிளகாய் துாள், கரம் மசாலா, மஞ்சள் துாள், உப்பு போடவும். மிக்சியில் அரைத்து வைத்த தேங்காய், முந்திரி, பட்டை, ஏலக்காய், சீரகம் சேர்ந்த கலவையை போடவும். அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதில், இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடவும். குக்கரில் இரண்டு விசில் வந்ததும், பரோட்டா சால்னா தயாராகிவிட்டது என தெரிந்துவிடும். இந்த சால்னாவை பரோட்டா மீது ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை