மேலும் செய்திகள்
டீ, காபியுடன் சாப்பிட முள்ளங்கி கட்லெட்
31-Jan-2026
சப்பாத்திக்கு உருளை கிழங்கு குருமா, தக்காளி கிரேவி மட்டும் வைத்தே சாப்பிட்டு போர் அடித்து விட்டதா; அப்படி என்றால் சற்று வித்தியாசமான சுவையில், சப்பாத்திக்கு தொடு கறியாக காரைக்குடி ஸ்டைலில் வெஜ் கறி செய்யலாமே. தேவையான பொருட்கள் கால் கப் காளான் கால் கப் உருளைக்கிழங்கு கால் கப் முள்ளங்கி ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு ஒரு டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் சோம்பு பத்து பல் பூண்டு ஒரு கொத்து கறிவேப்பிலை இரண்டு பெரிய வெங்காயம் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒரு கப் தக்காளி விழுது அரை டீஸ்பூன் மஞ்சள் துாள் ஒன்றரை டீஸ்பூன் குழம்பு மிளகாய் துாள் இரண்டு டீஸ்பூன் கடலை பருப்பு கால் கப் தேங்காய் விழுது கொத்தமல்லி இலை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு செய்முறை அடுப்பை ஆன் செய்து குக்கர் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்ததும், தோல் உரித்த பூண்டு, தோல் உரித்து வெட்டிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, மஞ்சள் துாள், குழம்பு மிளகாய் துாள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தண்ணீரில் ஊற வைத்த கடலை பருப்பு, நறுக்கிய காளான், நறுக்கிய உருளைக்கிழங்கு, முள்ளங்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். இரண்டு விசில் அடித்து, குக்கர் ஆறியதும் திறக்க வேண்டும். இதில் தேங்காய் விழுது சேர்த்து மீண்டும் இரண்டு விசில் விட்டு இறக்கி, கொத்தமல்லி இலை துாவினால் சுவையான காரைக்குடி வெஜ் கறி ரெடி. சப்பாதிக்கு மட்டுமின்றி இட்லி, தோசை, சாதத்திற்கும் வைத்து சாப்பிடலாம். சூப்பரான டேஸ்டில் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். - நமது நிருபர் -:
31-Jan-2026