உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / கேரள ஸ்டைல் சின்ன முள்ளன் மீன் குழம்பு

கேரள ஸ்டைல் சின்ன முள்ளன் மீன் குழம்பு

இந்த வாரம் கேரள ஸ்டைலில் சின்ன முள்ளன் மீன் குழம்பு செய்து, உங்கள் வீட்டினரை அசத்திவிடலாம். தேவையான பொருட்கள் (4 பேருக்கு) சின்ன முள்ளன் மீன் - அரை கிலோ புளி - எலுமிச்சை பழம் அளவு உப்பு - தேவையான அளவு மிளகாய் துாள் - 2 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 6 தேங்காய் துருவல் - அரை கப் சீரகம் - அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 6 ஸ்பூன் கடுகு - கால் ஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து செய்முறை முதலில் முள்ளன் மீனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். புளியை வெந்நீரில் ஊற வைக்கவும். புளியை கரைத்து, தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அதை மீன் சட்டியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அதில், 2 ஸ்பூன் மிளகாய் துாள், உப்பு, மஞ்சள் துாள் சேர்க்கவும். தேங்காய், வெங்காயம், சிறிது சீரகம் சேர்த்து, அரைத்து வைத்து கொள்ளவும். பின், 2 பச்சை மிளகாய் சேர்க்கவும். குழம்பை நன்றாக கொதிக்கவிடவும். சுத்தம் செய்த முள்ளன் மீன்களை குழம்பில் சேர்க்கவும். விரைவில் குழம்பில் மீன் வெந்து விடும். பின்னர், வேறு பாத்திரத்தில் 6 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் ஊற்றவும். ஒரு கொதி கொதித்து, எண்ணெய் மேலே பளபளவென்று வரும் போது, கேசை ஆப் பண்ணவும். அவ்வளவு தான் சின்ன முள்ளன் மீன் குழம்பு தயார். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை