உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / கொங்கு ஸ்டைல் கோச்சை கறி வறுவல்

கொங்கு ஸ்டைல் கோச்சை கறி வறுவல்

ஈரோடு , சேலம், கோவை பகுதிகளில் மட்டுமே கிடைக்க கூடிய கொங்குநாடு ஸ்பெஷலான 'கோச்சை' எனும் சண்டை சேவல் வறுவல் எப்படி தயார் செய்வது என பார்க்கலாம். கோச்சை கறி என்ற வார்த்தை, கொங்கு பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. சண்டை பயிற்சி அளிக்கப்படும் சேவலை 'கோச்சை' என்று அழைப்பது வழக்கம். மண்பானை மற்றும் விறகு அடுப்பு வைத்து சுமைக்க கூடியது. கோச்சை உடல் வலுவிற்காக சாப்பிடக் கூடியது. செய்முறை  விறகு அடுப்பில் மண் சட்டி வைக்கவும். இதில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றுங்கள்.  எண்ணெய் சூடானதும், பத்து காய்ந்த மிளகாயில் விதைகளை நீக்கிவிட்டு, அடுப்பில் போடவும். இப்போது 200 கிராம் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும்.  வெங்காயம் ஓரளவு வதங்கியதும், ஒரு ஸ்பூன் கல் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் துாள் போட்டு கலக்குங்கள்.  ஒரு ஸ்பூன் இஞ்சி -- பூண்டு பேஸ்ட் போடுங்கள். பச்சை வாசனை போன பின், அரை கிலோ கோச்சை கறி போட்டு மண் சட்டியை மூடி, 15 நிமிடங்களுக்கு சேவல் கறியை வேகவிடவும். கல் உப்பு போட்டதால் கறியிலிருந்து தண்ணீர் வெளி வந்திருக்கும்.  இப்போது ஒரு ஸ்பூன் மிளகாய் துாள், இரண்டு ஸ்பூன் தனியா துாள் சேர்க்கவும். அடுப்பு தீயை அதிகப்படுத்தவும்.  வறுவலுக்கு சூடு அதிகமாக இருந்தால் நல்லது. இதன் பிறகு 5-7 நிமிடங்களில் கறி வறுத்துவிடலாம். அவ்வளவு தான். கொங்கு பகுதி கோச்சை கறி வறுவல் ரெடி - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ