மேலும் செய்திகள்
பலாக்காய் பிரியாணி செய்யலாமா?
08-Aug-2026
- நமது நிருபர் -: வீட்டிலேயே எளிமையான முறையில், ஆப்பிள் பாயசம் செய்யலாம். இதை செய்வது எளிது. அதே சமயம் சுவை அதிகமாக இருக்கும். தேவையான பொருட்கள்: ஆப்பிள் - 2 பால் - 500 மி.லி., சர்க்கரை - அரை கப் நெய் - 1 டீஸ்பூன் முந்திரி, திராட்சை - 10 பீஸ் ஏலக்காய் துாள் - 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஆப்பிளை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு, நன்றாக துருவிக்கொள்ளவும். பின், வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே வணாலியில் துருவிய ஆப்பிளை சேர்த்து சிறிது நேரம் வதக்கி எடுத்து கொள்ளவும். பின், வேறு ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சி சுண்ட வைக்கவும். இதில், ஏற்கனவே தயாரித்து வைத்த ஆப்பிள் விழுதை சேர்க்கவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் துாள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். இறுதியில், வதக்கிய முந்திரி, திராட்சை சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான ஆப்பிள் பாயசம் தயார்.இதை, மாலை வேளையில் செய்து சாப்பிடுவது அருமையாக இருக்கும்!
08-Aug-2026