உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  அன்னாசி பழ கேசரியை சுவைப்போமா!

 அன்னாசி பழ கேசரியை சுவைப்போமா!

- நமது நிருபர் - எத்தனையோ வகை கேசரிகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், அன்னாசி பழத்தில் கேசரி செய்து சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா. சுவை பிரமாதமாக இருக்கும். ஒரு முறை செய்து தான் பாருங்களேன். தேவையான பொருட்கள் l அன்னாசி பழம் 1 கப் ( கட் செய்யப்பட்டது ) l ரவை 1/2 கப் l சர்க்கரை 3/4 கப் l நெய் 7 டீஸ்பூன் l தண்ணீர் 1 1/2 கப் l முந்திரி, திராட்சை சிறிதளவு l ஏலக்காய் துாள் 1/4 டீஸ்பூன் செய்முறை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். இதேபோல, ரவையையும் லேசாக வாசனை வரும் வரை வறுத்து தனியே வைக்கவும். மீண்டும் வாணலியில் நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய அன்னாசி பழ துண்டுகளை சேர்க்கவும். 5 நிமிடம் லேசாக வதக்கவும். 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதில், வறுத்த ரவையை சிறிது, சிறிதாக சேர்த்து, கட்டிகள் விழாதவாறு கிளறவும். ரவை நன்கு வெந்ததும், சர்க்கரை மற்றும் ஏலக்காய் துாள் சேர்த்து கிளறவும். இந்த கலவை கேசரி பதத்திற்கு கெட்டியாகும் வரை காத்திருக்க வேண்டும். பின்னர், அடுப்பை அணைக்கவும். அவ்வளவு தான் சுவையான அன்னாசி பழ கேசரி தயார். இதில், ஏற்கனவே வறுத்து எடுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து சாப்பிட வேண்டியது தான். சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ