உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  குட்டீஸ்களுக்கு பிடித்த மாம்பழ லட்டு!

 குட்டீஸ்களுக்கு பிடித்த மாம்பழ லட்டு!

- நமது நிருபர் - இது, மாம்பழ சீசன். விதவிதமான மாம்பழங்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளன. பழங்களை சாப்பிடுவதுடன், லஸ்ஸி, மில்க் ஷேக் செய்து சாப்பிடுவர். மாம்பழத்தில் சுவையான லட்டும் செய்யலாம். தேவையான பொருட்கள் மாம்பழ கூழ் - அரை கப் காய்ச்சிய பால் - அரை கப் தேங்காய் துறுவல் - 1 கப் ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன் நட்ஸ் - அரை கப் தேங்காய் பொடி - சிறிதளவு செய்முறை அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைக்கவும். அதில், தேங்காய் துறுவலை போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக வதக்கவும். அதன் பின், மாம்பழ கூழை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையில் சுண்டக்காய்ச்சிய பால், ஏலக்காய் துாள் சேர்த்து கிளறவும். கலவை கெட்டியாக லட்டு பிடிக்கும் பதத்துக்கு வந்தவுடன், அடுப்பை அணைக்கவும். மாம்பழ கலவை ஆறிய பின், சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, தேங்காய் பொடியில் புரட்டி எடுத்தால், சுவையான மாம்பழ லட்டு தயார். இவற்றை சிறிது நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்தால், சுவையாக இருக்கும். இதை தயாரிக்க, அதிகபட்சம், 15 நிமிடம் போதும். வீட்டுக்கு திடீர் விருந்தாளி வரும் போது, மாம்பழ லட்டு செய்து கொடுத்து அசத்தலாம். மாம்பழத்தில் இனிப்புத்தன்மை இருப்பதால், சர்க்கரை தேவையில்லை. குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை