உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / பணியார சட்டியில் மினி சாக்லேட் கேக்

பணியார சட்டியில் மினி சாக்லேட் கேக்

கேக் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று. பல வகை கேக் இருந்தாலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது, சாக்லேட் கேக் தான். இதை வீட்டிலேயே மிகவும் எளிமையாகவும், ருசியாகவும் செய்யலாம். இதற்கு மைக்ரோ ஓவன் தான் தேவை என்று இல்லை. பணியார சட்டியிலும் கூட செய்யலாம். செய்முறை  ஒரு பாத்திரத்தில் 2 கப் பால், நாட்டு சர்க்கரை, சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கவும்  இதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, கோ கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா போன்றவற்றைச் சேர்ந்து நன்கு கலக்கவும்  இறுதியாக சிறிதளவு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து, பணியாரம் ஊற்றும் பதத்திற்கு கலந்துக் கொள்ளுங்கள்  பின்னர் பணியார சட்டியை சூடேற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கேக் செய்வதற்காக செய்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றிக் கொள்ளவும்  பத்து முதல் 15 நிமிடங்களுக்கு அடுப்பை மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்தால் போதும் சுவையான 'மினி சாக்லேட் கேக்' ரெடி - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை