உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  நாவில் நடனமாடும் மஷ்ரூம் கிரேவி!

 நாவில் நடனமாடும் மஷ்ரூம் கிரேவி!

- நமது நிருபர் -: மஷ்ரூம் எனும் காளானை பயன்படுத்தி, பலவிதமான உணவு தயாரிக்கலாம். அந்த வகையில் மஷ்ரூம் கிரேவி செய்தால், நாவில் எச்சில் ஊற வைக்கும். 15 நிமிடங்களில் இதை செய்யலாம். செய்முறை முதலில் மஷ்ரூம்களை, சுத்தமாக கழுவி தேவையான அளவில் நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போடவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அதன் பின், நறுக்கிய தக்காளி, முந்திரிப்பருப்பை சேர்த்து வேக விடவும். இந்த மசாலா ஆறிய பின், மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்த மசாலாவை போடவும். இதில் மஞ்சள் துாள், மிளகாய் துாள், தனியா துாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் போது, நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம்களை சேர்த்து கிளறி, மூன்று, நான்கு நிமிடங்கள் வேக விடவும். அதன்பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் வேக வைக்கவும். இது கெட்டியானதும், கரம் மசாலா, நறுக்கிய கொத்துமல்லியை துாவி, இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்தால், சுவையான மஷ்ரூம் கிரேவி தயார். சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை