உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  பனையோலை கொழுக்கட்டை!

 பனையோலை கொழுக்கட்டை!

- நமது நிருபர் -: கொழுக்கட்டையில் பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, அம்மினி கொழுக்கட்டை, நீர்க் கொழுக்கட்டை, சிறுதானிய கொழுக்கட்டை என, பல வகைகள் உள்ளன. இந்த வாரம் பனையோலையில் செய்யப்பட்ட கொழுக்கட்டையை ருசி பார்க்கலாம். தேவையான பொருட்கள் l அரிசி மாவு -- 2 கப் l வெல்லம் அல்லது கருப்பட்டி துாள் - 1 கப் l தேங்காய் துருவல் -- அரை கப் l ஏலக்காய் துாள் - அரை டீஸ்பூன் l சுக்கு பொடி - அரை டீஸ்பூன் l பனை இலைகள் - தேவைக்கு ஏற்ப செய்முறை முதலில் பெரிய பாத்திரத்தில் அரை கப் தண்ணீரை ஊற்றவும். அதனுடன் வெல்லம் அல்லது கருப்பட்டியை பொடியாக்கி, நன்றாக கொதிக்க விடவும். இந்த சர்க்கரை தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். இதையடுத்து, பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் துருவல், சுக்கு துாள், ஏலக்காய் பொடியை சேர்த்து, நன்றாக கலக்கவும். பின், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, மாவை சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். சுத்தம் செய்து வைத்துள்ள பச்சை பனை ஓலைகளில், அகலவாக்கில், கொழுக்கட்டைக்காக பிசைந்து வைத்துள்ள மாவை வைக்கவும். மாவு வெளியே வரமால் இருக்க, நுாலால் பனை இலையை சுற்றி, கட்டி கொள்ளவும். பின், ஒரு இட்லி தட்டில் வைத்து 10 அல்லது, 20 நிமிடம் நீராவியில் வேக வைத்து எடுத்தால், பனையோலை கொழுக்கட்டை தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை