உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / கிராமத்து சுவையில் பெப்பர் சிக்கன்

கிராமத்து சுவையில் பெப்பர் சிக்கன்

செய்முறை : முதலில் சிக்கனை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக ஆன பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, அதில் மிளகுத்துாள், சீரகத்துாள் சோம்புத்துாள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். சிறிதளவு கொதித்த பிறகு அதில் கழுவி வைத்திருந்த சிக்கனை சேர்த்து பிரட்ட வேண்டும். அதன் பிறகு மஞ்சள் துாள், உப்பு, இன்னும் கூடுதல் சுவைக்காக மிளகுத்துாள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு ஒரு மூடி போட்டு, 30 நிமிடம் வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் சிக்கன் வெந்ததும் அதில் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் காரசாரமான டேஸ்டான கிராமத்து சுவையில் சிக்கன் பெப்பர் ப்ரை தயார். இதனை அப்படியே சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் பாத்திரத்தில் ஒரு பருக்கைசாதம் கூட மிச்சம் இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி