ராஜஸ்தான் ஸ்பெஷல் கொய்யா சட்னி
- நமது நிருபர் - வீட்டில் செய்யப்படும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி காம்பிஷேசனில் சாப்பிடுவது யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு சட்னி என்றால் அலாதி பிரியம். பல வைரைட்டி சட்னி சாப்பிட ஆசைப்படுவர். புதினா - கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி உட்பட சில சட்னிகள் மட்டுமே வீடுகள், ஹோட்டல்களில் அதிகம் செய்யப்படும். ஆனால், கொய்யா பழத்தை வைத்தும் சட்னி செய்யலாம். என்ன கொய்யா பழத்தில் சட்னியா என்று ஆச்சர்யமாக கூட இருக்கலாம். கொய்யா ஆரோக்யமான பழங்களில் ஒன்று. வைட்டமின் சி அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு, பெற்றோர் அதிக கொய்யா பழம் கொடுப்பவர். கொய்யாவை வைத்து எப்படி சட்னி செய்வது என்று பார்க்கலாம். செய்வது மிகவும் எளிது. தேவையான பொருட்கள் l பழுத்த கொய்யாப்பழம் - 1 l காஷ்மீர் மிளகாய் - 5 l சீரகம் - 1டீஸ்பூன் l அரை டீஸ்பூன் நாட்டு l சர்க்கரை l உப்பு - தேவையான அளவு செய்முறை ஒரே மாதிரியான சட்னியை சாப்பிட்டு போர் அடித்து விட்டால், கண்டிப்பாக ஒரு முறை செய்து பாருங்கள். இந்த வகை சட்னி, ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்பெஷலாக உள்ளது. சப்பாத்தி, பரோட்டா, சமோசா, புகழ்பெற்ற தின்பண்டமான காக்ராவுக்கு சைடிஷ் போல வைத்து சாப்பிடுகின்றனர்.