உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / நெய் சிக்கன் கிரேவி

நெய் சிக்கன் கிரேவி

கோழிக்கறியில் செய்யப்படும் உணவுகள் மீது பலருக்கும் அலாதி பிரியம் தான். அப்படி ஒரு நெய் சிக்கன் கிரேவி தயாரிப்பது எப்படி என இங்கு பார்க்கலாம். தேவையான பொருள்கள்; அரை கிலோ சிக்கன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்பூன்மல்லித்தூள் 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள் 3/4 ஸ்பூன்மிளகுத்தூள் 2 ஸ்பூன்நெய் 1 ஸ்பூன்கரம் மசாலாத்தூள் 1/2 ஸ்பூன்மிளகாய்த்தூள் தேவையான அளவுஉப்புத்தூள் 1/4 ஸ்பூன்சீரகத்தூள் 5 ஸ்பூன்தயிர் தேவையான அளவுஆயில் 10 எண்ணிக்கைசின்ன வெங்காயம் கட் செய்வது 3பழுத்த மிளகாய் 1தக்காளி தேவையான அளவுமல்லி இலை செய்முறை: சிக்கனை கழுவி சுத்தம் செய்து குக்கரில் போடவும். அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மல்லித்தூள் சேர்க்கவும். மிளகுத்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். மிளகாய்த்தூள் உப்புத்தூள் சீரகத்தூள் சேர்க்கவும். இதனுடன் தயிர் 5 ஸ்பூன் நன்கு கிளறி விடவும் எல்லா மசாலா சிக்கனில் படுமாறு நன்கு கிளறவும். குக்கரை மூடி வைத்து ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும் கடாயை ஸ்டவ்வில் வைக்கவும். கடாயில் ஆயில் சேர்த்து ஆயில் சூடானவுடன் சிறிதளவு சோம்பு சேர்க்கவும் உடன் சின்ன வெங்காயம் 10 எண்ணிக்கை கட் செய்து சேர்க்கவும் 4 பழுத்த மிளகாய் கட் செய்து சேர்க்கவும். உடன் இதற்கு சிறிதளவு உப்பு சேர்க்கவும் கூடவே கால் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் நன்கு கிளறிவிட்டு ஒரு தக்காளி கட் செய்து சேர்க்கவும் சிறிதளவு மிளகுத்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும் உடன் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்போது குக்கரில் வேகவைத்து வைத்திருந்த சிக்கனை சேர்க்கவும் நன்றாக மசாலாக்கள் கலந்து வருமாறு நன்றாக கலந்து விடவும். ஒரு நிமிடம் சிறு தீயில் அப்படியே வைத்து உடன் 2 டஸ்பூன் நெய் சேர்க்கவும் சிறிதளவு மல்லி இலை சேர்க்கவும் நன்கு கலந்து விட்டு சிறு தீயில் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான நெய் சிக்கன் கிரேவி தயார் சாப்பிடலாம் வாங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை