உள்ளூர் செய்திகள்

காரதட்டை

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - ரெண்டு கப் வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு - கால் கப் பொட்டுக்கடலை மாவு - கால் கப் கடலைப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு - 10 கருவேப்பிலை - தேவையான அளவு பெருங்காயம் - அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்துாள் - ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் ரெண்டு கப் பச்சரிசி மாவை ஒரு சிறிய கடாயில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து டிரை ஆக வறுத்து எடுக்க வேண்டும். பச்சரிசி மாவில் ஈரப்பதம் இருக்கவே கூடாது. இப்போது வறுத்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி அதை ஆறவிடுங்கள். மறுப்புறம் நாம் எடுத்து வைத்த கடலைப்பருப்பை தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். இப்போது நாம் வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவை எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த மாவை ஒரு தனி பாத்திரத்தில் சேர்த்து வைக்க வேண்டும். இந்த வறுத்த மாவுகளுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கருவேப்பிலை, நறுக்கிய பூண்டு, பொட்டுக்கடலை மாவு மற்றும் ஊற வைத்த கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது இந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் மற்றும் சிறிது சூடான எண்ணெய் சேர்த்து மாவு பதத்தில் பிசைந்து கொள்ளுங்கள். மாவு கெட்டியாக வந்ததும் தட்டை மாவு தயார். இதற்கு பிறகு நாம் தயாரித்து வைத்துள்ள தட்டை மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, அதனை உங்கள் உள்ளங்கையில் வைத்து தட்டை போல அமுக்க வேண்டும். இந்த மாவை தட்டையாக அமுக்குவதற்கு முன்பு உங்கள் உள்ளங்கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டால் மாவு ஒட்டாமல் வரும். இதனைத் தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் சூடானதும் இந்த தட்டையை சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும். இந்த தட்டையின் இரண்டு புறமும் நன்கு பொரிந்து வந்த பிறகு வெளியே எடுத்து அதில் உள்ள எண்ணெய் வடிய சிறிது நேரம் காற்றோட்டமாக வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான காரமான காரதட்டை தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி