உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / குஜராத்தி ஹண்ட்வோ செய்வோமா?

குஜராத்தி ஹண்ட்வோ செய்வோமா?

செய்முறை முதலில் அரிசி மற்றும் மேற்கூறிய அனைத்து பருப்பு வகைகளையும் கழுவி, ஐந்து மணி நேரம் ஊற விடவும். அதன் பின் குறைவான நீர் சேர்த்து மிக்சியில் பருப்புகளையும், அரிசியையும் அரைக்கவும்; மிகவும் நைசாக இருக்க கூடாது. அடை மாவு பதத்தில் இருக்க வேண்டும். இந்த மாவில் ஓட்ஸ், புளித்த தயிர் சேர்த்து, நன்றாக கலக்க வேண்டும். இட்லி மாவு பதத்தில் கரைத்து, இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறு நாள் காலையில் கேரட், பட்டாணியுடன், விருப்பமான காய்கறிகள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மாவில் சேர்க்க வேண்டும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் கடுகு, பூண்டு, கறிவேப்பிலை, எள் சேர்த்து வறுக்கவும். வறுத்த பின் மிளகாய் துாள், சமையல் சோடா, உப்பு போட்டு நன்றாக கலக்கவும். இதனை மாவில் சேர்க்கவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, சூடானதும் மிதமான தீயில் வைத்து, மாவை தோசை போன்று ஊற்றவும். இது ஓரளவு தடிமனாக இருக்க வேண்டும். வெந்த பின் திருப்பி போடவும். வெந்த பின் அதன் மீது கொத்துமல்லி தழையை துாவி அலங்கரித்தால், குஜராத்தி ஹண்ட்வோ தயார். சூடாக பரிமாறலாம். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி