உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / காரசாரமான காலி ப்ளவர் பரோட்டா

காரசாரமான காலி ப்ளவர் பரோட்டா

கோபி பரோட்டா அல்லது காலிப்ளவர் பரோட்டா இந்தியாவில் புகழ்பெற்ற டிபன் வகையாகும். காரசாரமான காலிப்ளவர் மசாலாவை கோதுமை மாவில் கலந்து சுடச்சுட பரோட்டா சுட்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான். இந்த பரோட்டாவுக்கு தொட்டுக்க பெரிதாக கிரேவி எல்லாம் வேண்டாம். கொஞ்சமாக தயிர் இருந்தாலே போதுமானது. சிம்பிளா உங்க பிள்ளைங்களுக்கு கூட காலை டிபனாக கொடுத்து விடலாம். தேவையான பொருட்கள்: 1/2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் தேவையான அளவு உப்பு தேவையான அளவு கரம் மசாலா தூள் தேவையான அளவு மிளகாய்த் தூள் தேவையான அளவு சீரகத் தூள் தேவையான அளவு மல்லித் தூள் தேவையான அளவு மஞ்சள் தூள் 1 பச்சை மிளகாய் தேவையான அளவு தண்ணீர் 1 கப் கோதுமை மாவு 1 கப் காலிபிளவர் செய்முறை: காலிப்ளவரை பொடி பொடியாகத் துருவிக் கொள்ளுங்கள். அதை ஒரமாக வைத்து விடுங்கள். ஒரு பவுலை எடுத்து அதில் கோதுமை மாவு, உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் துருவிய காலி ப்ளவரை போட்டு நன்றாக வதக்குங்கள். நன்றாக வதங்கிய பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து 30 நிமிடங்கள் வதக்க வேண்டும். இப்பொழுது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி மற்றும் மாங்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். உப்பு மற்றும் கரம் மசாலாவை தேவைக்கேற்ப போட்டு கொள்ளுங்கள். எல்லாத்தையும் சேர்த்து 2-4 நிமிடங்கள் வரை கிளறுங்கள். கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை சேர்த்து அதையும் கிளறிக் கொள்ளுங்கள். பிசைந்த மாவை எடுத்து சிறிய பந்துகளாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்த்து அதன் நடுவே கோபி மசாலாவை வைத்து மூடி மறுபடியும் அழுத்தாமல் லேசாக தேயுங்கள். கோபி மசாலா வெளியே வராமல் தேய்க்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தேய்த்த பரோட்டாவைப் போட்டு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து இரண்டு புறமும் வேகும்படி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுங்கள். சுவையான கோபி பரோட்டா ரெடி. ஒரு தட்டில் சுடச்சுட வைத்து பக்கத்தில் பட்டர், ஊறுகாய் அல்லது தயிர், கிரேவி ஏதாவது ஒன்றை வைத்து தொட்டு ருசிக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை