உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / காரமான மிளகு காளான் வறுவல்

காரமான மிளகு காளான் வறுவல்

மிளகு காளான் வறுவலை உணவகங்களுக்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. வீட்டிலேயே எளிய முறையில் செய்து சாப்பிட்டு மகிழலாம். செய்முறை ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதில், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் உப்பு, மிளகாய் துாள், மஞ்சள்துாள், தனியா துாள் சேர்த்து நன்றாக கலந்து விடவும். பிறகு, நறுக்கிய காளானை சேர்த்து போட்டு வதக்கவும். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். பிறகு, வாணலியை தட்டு போட்டு மூடி வேக விட வேண்டும். பின்னர், சிறிது நேரம் கழித்து வாணலியில் மீதுள்ள மூடியை திறந்து காளான் வெந்துவிட்டதா என பார்க்க வேண்டும். பின், காளான் வெந்ததும் மிளகு துாள், கொதமல்லி இலைகள் துாவி நன்றாக வதக்கி இறக்கினால் சுவையான மிளகு காளான் வறுவல் தயார். இதை அப்படியோ அல்லது சாப்பாட்டுக்கு தொட்டு சாப்பிடலாம். முக்கியமாக வீட்டில் அசைவம் செய்யாத நாட்களில் மிளகு காளான் வறுவலை செய்து சாப்பிட்டு மகிழலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை