உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / முள்ளு முருங்கை வடை முள்ளு முருங்கை வடை

முள்ளு முருங்கை வடை முள்ளு முருங்கை வடை

சளி இருப்போருக்கு, முள்ளு முருங்கை வடை தயாரித்துக் கொடுத்தால், அது தன் வேலையை காட்ட துவங்கிவிடும். இது, சளியை கரைக்கும் தன்மை கொண்டது. மாலை நேரத்தில் சூடாக எண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

செய்முறை

 ஒரு கப் புழுங்கல் அரிசி அல்லது பச்சரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். கிரைண்டரில் ஒரு கப் புழுங்கல் அரிசி, காம்பு கிள்ளிய முள்ளு முருங்கை இலைகள், இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், 5 பற்கள் பூண்டு போட்டு மாவு பதத்தில் அரைக்கவும். இந்த மாவை, தேவையான அளவு எடுத்து கொண்டு ஒரு வெள்ளை துணியில் பருப்பு வடை சைசில் தட்டவும். இந்த மாவு, கையில் ஒட்டாமல் இருப்பதற்காக லேசாக எண்ணெய் அல்லது தண்ணீரை தடவிக் கொள்ள வேண்டும். வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி, சூடாக்க வேண்டும். வடை போன்று தட்டி வைத்திருந்தை எண்ணெயில் போட்டு இரு பக்கமும் வேக வைக்க வேண்டும். முள்ளு முருங்கை வடை தயார். இதற்கு தொட்டு சாப்பிட, ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் மிளகு, சீரகம் போட்டு எண்ணெய் இன்றி, இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். அதன் பின், இவை அனைத்தையும் மிக்சியில் போட்டு, இரண்டு வர மிளகாய், சிறிதளவு உப்பு, கால் கப் பொறிக்கடலை சேர்த்து அரைத்து பொடியாக்கி வைத்து கொள்ளவும். இதை வடையுடன் சேர்த்து சாப்பிடவும்.கையை பதம் பார்க்காத வடையை செய்வதற்கு கிச்சனுக்கு சென்று விட்டீர்களா?- நமது நிருபர் -சளி இருப்போருக்கு முள்ளு முருங்கை வடை தயாரித்துக் கொடுத்தால், அது தன் வேலையை காட்ட துவங்கிவிடும். இது, சளியை கரைக்கும் தன்மை கொண்டது. மாலை நேரத்தில் சூடாக எண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

செய்முறை

 ஒரு கப் புழுங்கல் அரிசி அல்லது பச்சரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். கிரைண்டரில் ஒரு கப் புழுங்கல் அரிசி, காம்பு கிள்ளிய முள்ளு முருங்கை இலைகள், இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஐந்து பற்கள் பூண்டு போட்டு மாவு பதத்தில் அரைக்கவும். இந்த மாவை, தேவையான அளவு எடுத்து, ஒரு வெள்ளை துணியில் பருப்பு வடை சைசில் தட்டவும். இந்த மாவு, கையில் ஒட்டாமல் இருப்பதற்காக லேசாக எண்ணெய் அல்லது தண்ணீரை தடவிக் கொள்ள வேண்டும். வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி, சூடாக்க வேண்டும். வடை போன்று தட்டி வைத்திருந்ததை எண்ணெயில் போட்டு இரு பக்கமும் வேக வைக்க வேண்டும். முள்ளு முருங்கை வடை தயார். இதற்கு தொட்டு சாப்பிட, ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் மிளகு, சீரகம் போட்டு எண்ணெய் இன்றி, இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். அதன் பின், இவை அனைத்தையும் மிக்சியில் போட்டு, இரண்டு வர மிளகாய், சிறிதளவு உப்பு, கால் கப் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து பொடியாக்கி வைத்து கொள்ளவும். இதை வடையுடன் சேர்த்து சாப்பிடவும்.கையை பதம் பார்க்காத வடையை செய்வதற்கு கிச்சனுக்கு சென்று விட்டீர்களா? - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை