| ADDED : டிச 06, 2025 05:29 AM
பீட்ரூட், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. உடலில் புதிய ரத்தம் சுரக்க உதவுகிறது. ஆனால், சில குழந்தைகளுக்கு பீட்ரூட் பிடிப்பது இல்லை.இவர்களுக்கு பீட்ரூட்தோசை செய்து கொடுத்தால்விரும்பி சாப்பிடுவர்அதை எப்படி செய்வது என, பார்க்கலாம். தேவையான பொருட்கள்: l பீட்ரூட் - அரை கப் l அரிசி மாவு - 1 கப் l ரவை - கால் கப் l உப்பு - தேவையான அளவு l வெங்காயம் - 1 l பச்சை மிளகாய் - 2 l கொத்துமல்லி - ஒரு கைப்பிடி l கறிவேப்பிலை - ஒரு கொத்து l சீரகம் - 1 ஸ்பூன் l எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, மிக்சியில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து மாவாக அரைக்கவும். இந்த பீட்ரூட் விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அதனுடன், அரிசி மாவு, ரவை, உப்பு, மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மாவில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இதனை, 10 நிமிடம் மூடி வைக்கவும். அதன்பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் தடவி, மாவு ஊற்றி மூடி வைக்கவும். முறுகலாக வெந்த பின் சூடாக பரிமாறவும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது ஊறுகாய் பொருத்தமாக இருக்கும். காலை டிபனுக்கு ஏற்றது. செய்வதும் எளிது. வீட்டுக்கு திடீர் விருந்தாளிகள் வந்தால், பீட்ரூட் தோசை செய்து கொடுக்கலாம் - நமது நிருபர் - .