உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / சப்பாத்திக்கு தொட்டுக்க வெஜிடபிள் சப்ஜி

சப்பாத்திக்கு தொட்டுக்க வெஜிடபிள் சப்ஜி

சப்பாத்திக்கு வழக்கம் போல குருமா செய்வதை நிறுத்திவிட்டு, ஒரு முறை வெஜிடபிள் சப்ஜி செய்து பாருங்கள். சுவை பிரமாதமாக இருக்கும். சப்பாத்தி விரும்பி சாப்பிடாதவர்கள் கூட, வெஜிடபிள் சப்ஜியுடன் சாப்பிடும் போது, இன்னும் இரண்டு, மூன்று சப்பாத்திகளை கேட்டு சாப்பிடுவர். செய்முறை காலிபிளவர், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை அரைவேக்காடாக வேக வைத்து கொள்ளவும். பிறகு, வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பன்னீரை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதே வாணலியில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, மிளகாய் துாள், மல்லித்துாள், சீரகத்துாள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அனைத்தையும் நன்றாக வதக்கியதும் காய்கறி, பன்னீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். இதையடுத்து, பிரஷ் கிரீம் கொத்தமல்லி இலைகள் துாவி இரண்டு நிமிடத்தில், இறக்கினால் சுவையான வெஜிடபிள் சப்ஜி தயார். இந்த வெஜிடபிள் சப்ஜியை, சப்பாத்தி, சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, சுவை பிரமாதமாக இருக்கும் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !