மேலும் செய்திகள்
பசியை துாண்டும் பலாக்காய் கட்லெட்
12-Apr-2025
வேலுார் என்றால் அனைவருக்கும் அங்குள்ள கோட்டை தான் நினைவுக்கு வரும். இந்நகரில் கிடைக்க கூடிய ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றாக 'மீன் சேமியா' பிரபலமடைந்து வருகிறது.கோட்டையின் எதிர்புறத்தில் மீன் சேமியா விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் ஆர்வமுடன் ருசித்து உண்பர். பெயர் தான் மீன் சேமியா. ஆனால் அவர்கள் இடியாப்பத்தை தான் பயன்படுத்துகின்றனர். செய்முறை
முதலில் 10 காய்ந்த மிளகாய், 10 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சியை, 150 மில்லி லிட்டர் சுடு தண்ணீரில் போட்டு, 15 நிமிடம் ஊறவிடுங்கள். பின், ஆறிய பின், மிக்சியில் போட்டு பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவும். இதில், பாதி எலுமிச்சை சாறு சேருங்கள். ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். சிறிதளவு பேஸ்டை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். கடைசியில் தேவைப்படும். இரண்டு ஸ்பூன் சோளமாவை, துண்டு துண்டாக வெட்டப்பட்ட மீனில் தடவி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீன் துண்டுகளை இருபுறமும் தலா மூன்று நிமிடங்கள் வறுத்து எடுத்து கொள்ளுங்கள். அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாய் ஒன்றை பொடியாக வெட்டி போடவும். இதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை சேருங்கள். சிறிது நேரம் கழித்து, இரண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்தால், சீக்கிரமாக வதங்கிவிடும். அடுத்ததாக, ஒரு பெரிய தக்காளியை போட்டு, பேஸ்டை சேர்க்கவும். பச்சை வாடை போன பின், ஒரு முட்டையை உடைத்து ஊற்றுங்கள். ஒரு பாக்கெட் இடியாப்பத்தை உடைத்து போட்டு, 'கொத்து புரோட்டா' செய்வது போன்று கொத்தவும். இத்துடன் ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் மிளகு துாள் போடுங்கள். சிறிது நேரத்தில் சுவையான வேலுார் மீன் சேமியா ரெடி. - நமது நிருபர் -
12-Apr-2025