உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / பன்னீரில் பரோட்டாவும் செய்யலாம்

பன்னீரில் பரோட்டாவும் செய்யலாம்

பன்னீர் பரோட்டா நம் நாட்டின் மிகவும் பிரபலமான சிற்றுண்டியாகும். இதை எப்படி செய்வது என, பலருக்கும் தெரிவதில்லை. பன்னீர் பரோட்டா எப்படி செய்வது என, தெரிந்து கொள்ளலாமா?

செய்முறை

ஒரு பாத்திரத்தில், துருவிய பன்னீர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் துாள், கரம் மசாலா, மஞ்சள் துாள், சீரக துாள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.கோதுமை மாவை சிறிதளவு உப்பு சேர்த்து, சப்பாத்தி பதத்துக்கு மிருதுவாக பிசையவும். இந்த மாவை உருண்டைகளாக்கவும். உருண்டைகளை சப்பாத்தியாக தேய்க்கவும். இதன் நடுவில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பன்னீர் கலவையில் ஒரு ஸ்பூன் எடுத்து, சப்பாத்தி மாவில் வைத்து மூடி, சப்பாத்தியாக திரட்டவும்.அடுப்பில் வாணலி வைத்து, சூடானதும் சப்பாத்தியை போட்டு, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான பன்னீர் பரோட்டா தயார். தொட்டுக்கொள்ள ரைதா, தேங்காய் சட்னி அல்லது ஊறுகாய் பொருத்தமாக இருக்கும் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை