உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / மண மணக்கும் மாங்காய் சட்னி அப்படியே தொட்டு சாப்பிடலாம்

மண மணக்கும் மாங்காய் சட்னி அப்படியே தொட்டு சாப்பிடலாம்

தோசைக்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால், மாங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டு இருக்கீங்களா. இதை கேட்கும் போதே வித்தியாசமாக இருப்பது போல, சுவையும் வித்தியாசமாக இருக்கும். இந்த மாங்காய் சட்னியை செய்வது சுலபம். ஒரு முறை சாப்பிட்டவர்கள் மீண்டும் கேட்பர். அப்படிப்பட்ட சுவை மிகுந்த டிஷ்களில் மாங்காய் சட்னியும் ஒன்றாகும். செய்முறை முதலில் மாங்காய்களின் இரண்டு பக்கங்களையும் கத்தியால் வெட்டி கொள்ள வேண்டும். கொட்டை பகுதியில் உள்ள சதை பகுதியை வெட்ட தேவையில்லை. தக்காளியை இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும். பின், வாணலியில் லேசாக எண்ணெய் ஊற்றி, அதில் மாங்காய், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை போடவும். வாணலியில் மூடி போட்டு சிறிது நேரம் வேக வைக்கவும். இதையடுத்து, மாங்காயில் உள்ள சதை பகுதியை கரண்டியால் சுரண்டி எடுக்கவும். மாங்காய் சதை பகுதி, வாணலியில் போட்டு எடுத்த தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவைற்ற போடவும். இதில், புதிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். மிளகாய் தூள், தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மாங்காய் சட்னி தயார். இந்த மாங்காய் சட்னியை தோசையுடன் தொட்டு சாப்பிடும் போது சுவை அதிகமாக இருக்கும். இந்த சட்னியை தாளிக்க தேவையில்லை. அப்படியே தொட்டு சாப்பிடலாம். ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள். நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள்: நார் இல்லாத மாங்காய் 2 பூண்டு 10 பல் தக்காளி 4 பச்சை மிளகாய் 4 எண்ணெய் தேவையான அளவு வெங்காயம் 2 மிளகாய் துாள் தேவையான அளவு உப்பு தேவையான அளவு தண்ணீர் தேவையான அளவு - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை