உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  சீக்கிரம் செய்யலாம் கறிவேப்பிலை சாதம்!

 சீக்கிரம் செய்யலாம் கறிவேப்பிலை சாதம்!

- நமது நிருபர் - தினமும் ஒரே விதமான சிற்றுண்டி தின்று, போரடிக்கிறதா... மாறுதலுக்கு கறிவேப்பிலை சாதம் செய்து பாருங்கள். செய்வதும் எளிது. தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - ஒரு கப் கடலைப்பருப்பு - 2 ஸ்பூன் துவரம் பருப்பு - 2 ஸ்பூன் சீரகம் - 2 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் உலர்ந்த மிளகாய் - 6 தனியா - 2 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் - 2 ஸ்பூன் கடுகு - அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி வடித்த சாதம் - ஒன்றரை கப் உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில் சாதம் வடித்து, அகலமான பாத்திரத்தில் பரப்பி விடவும். சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, சீரகம், மிளகு, உலர்ந்த மிளகாய் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். அதன் பின் கறிவேப்பிலை போட்டு, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் இவற்றை மிக்சியில் போட்டு, நைசாக அரைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் சாதம், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள, கறிவேப்பிலை மசாலா, உப்பு போட்டு கிளறினால், ஆரோக்கியமான, சுவையான கறிவேப்பிலை சாதம் தயார். அப்பளம், வத்தல் அல்லது வெங்காய தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை