மேலும் செய்திகள்
'ஆந்திரா ஸ்டைல்' சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
20-Sep-2025
தீபாவளி என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தை குறிக்கும் பண்டிகையாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் செய்யும் பலகாரம் செய்து சாப்பிடுவது; பட்டாசு வெடிப்பது என்று ஒரே கொண்டாட்டமாக இருக்கும். பொதுவாக தீபாவளிக்கு வீட்டில் முறுக்கு, அதிரசம், ரவா லட்டு, சுசீயம், வடை, ஜாங்கிரி உட்பட பலகாரங்கள் வீடுகளில் செய்வர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஓமப்பொடியையும், தீபாவளிக்கு வீட்டிலேயே செய்து அசத்தலாமே. தேவையான பொருட்கள் ஒரு கப் கடலை மாவு கால் கப் அரிசி மாவு இரண்டு கொத்து கறிவேப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன் ஓமம் அரை டீஸ்பூன் பெருங்காய பவுடர் உப்பு, எண்ணெய் தேவையான அளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் ஓமம் சேர்த்து வறுத்து ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் அரைத்து தண்ணீர் ஊற்றி மறுபடியும் அரைத்து எடுக்கவும். கலந்து வைத்த மாவுடன், பெருங்காய பவுடர், ஓம தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இடியாப்ப அச்சில் சேர்த்து, அடுப்பை ஆன் செய்து எண்ணெய் சட்டி வைத்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இடியாப்ப அச்சில் இருக்கும் கலவையை பிழிந்து விடவும். முறுக்கு பதத்தில் வந்ததும் எண்ணெய் சட்டியில் இருந்து வெளியே எடுத்து ஆற வைத்து உடைத்து விட்டு, கறிவேப்பிலையை சேர்த்தால் சுவையான ஓமப்பொடி தயார். கடலை மாவு சேர்ப்பதால், பெருங்காய பவுடர் சேர்த்துக் கொண்டால் வாயு தொல்லை இருக்காது. கடையில் சென்று வாங்காமல் ஈசியாக வீட்டிலேயே ஓமப்பொடி செய்து சாப்பிடலாமே. - நமது நிருபர் -
20-Sep-2025