உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டாலும் யக் ஷகானாவில் அசத்தும் பரத்

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டாலும் யக் ஷகானாவில் அசத்தும் பரத்

ஆட்டிசம் என்பது நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சி குறைபாடு. இந்த குறைபாடு குழந்தை பருவத்திலேயே துவங்குகிறது. சமூக தொடர்பு, திரும்ப திரும்ப சொல்லுதல், குறிப்பிட்ட நடத்தையில் ஏற்படும் தொந்தரவுகள் ஆகியவை ஆட்டிசத்தின் முக்கிய அறிகுறியாக உள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நோயாளிகள் போன்று சிலர் பார்க்கின்றனர். ஆனால் உண்மையிலேயே ஆட்டிசம் நோய் கிடையாது. அந்த குறைபாடு உள்ளவர்களுக்கு புரிந்து கொள்ளும் திறன் அதிகம் இருக்கும். இதை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும். ஆட்டிசத்தால் பாதித்தவர்கள் பல சாதனைகள் செய்து உள்ளனர். இவர்களில் ஒருவர் மங்களூரின் சக்தி நகரை சேர்ந்த பரத் பிரசாத், 29.சிறுவயதிலேயே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இவரை, பெற்றோர் தனி கவனம் செலுத்தினர். பள்ளி படிப்பை முடித்ததும் ஐ.டி.ஐ., எனும் தொழிற்படிப்பு படித்தார்.தற்போது சானித்யா என்ற சிறப்பு பள்ளியில் சேர்ந்து கடலோர மாவட்டத்தின் பராம்பரியமான யக் ஷகானாவில் பங்கேற்கிறார். கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பஜனையும் பாடுகிறார்.இதுகுறித்து சானித்யா சிறப்பு பள்ளி ஆசிரியை அக் ஷதா கூறுகையில்:ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளியில் பரத் பிரசாத் சேர்ந்தார். நாங்கள் அளித்த பயிற்சியால் தற்போது யக் ஷகானா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பஜனை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாடுகிறார். அவரை நினைத்தால் பெருமையாக உள்ளது. அவருக்கு ஏதாவது ஒரு வேலையை ஒதுக்கினால், அதில் சிறிய தவறு கூட இல்லாமல் நேர்த்தியாக செய்வார்.கணினி வகுப்பில் பங்கேற்கும் அவர், தரவுகளை எப்படி கையாள்வது என்பதையும் தெரிந்து வைத்து உள்ளார். அவரை பார்க்கும் போது ஆட்டிசத்தால் பாதித்தவர் போன்று தெரியாது. பலருக்கு உத்வேகமாக இருக்கிறார். வரும் நாட்களில் அவரது திறமையை நாங்கள் அதிகம் பயன்படுத்தி கொள்வோம். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை, வெளி கொண்டு வருவதில் அனைவரும் பங்காற்ற வேண்டும்.இவ்வாறு கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி