உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / ஹம்பிக்கு வந்து சுற்றுலா வழிகாட்டிகளாக மாறிய இத்தாலி தம்பதி

ஹம்பிக்கு வந்து சுற்றுலா வழிகாட்டிகளாக மாறிய இத்தாலி தம்பதி

ஹம்பி, இந்தியாவில் மட்டுமின்றி, வெளி நாடுகளிலும் பிரசித்தி பெற்றதாகும். வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஹம்பி வருகின்றனர்.விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவில் அமைந்துள்ள ஹம்பி வரலாற்று சிறப்புமிக்கது. வெளி நாட்டினரை ஈர்க்கிறது. இங்குள்ள சுற்றுலா தலங்கள், கோவில்களை பார்த்து ஆச்சரியமடைகின்றனர். மன நிறைவுடன் திரும்பிச் செல்கின்றனர்.ஆனால் இத்தாலியை சேர்ந்த லுாசியா மற்றும் அனா தம்பதி, ஹம்பியை விட்டுச் செல்ல மனம் இல்லாமல், இங்கேயே தங்கி உள்ளனர்.

நிரந்தரம்

வழிகாட்டிகளாகவும் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹம்பிக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, இங்குள்ள சிறப்புகளை விவரிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்திய குடியுரிமை வழங்கினால், நிரந்தரமாக ஹம்பியில் வசிக்கவும் விரும்புகின்றனர்.இத்தாலி தம்பதி கூறியதாவது:ஹம்பி எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இங்குள்ள பாரம்பரியம், வரலாறு, சம்பிரதாயம், மக்களின் அன்பு வியக்க வைக்கிறது. ஹம்பிக்கும், இங்குள்ள மக்களுக்கும் எங்கள் மனதில் சிறப்பான இடம் உள்ளது.நாங்கள் முதன் முதலில் சொர்க்கத்துக்கு வந்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது. 30 ஆண்டுகளாக நாங்கள் வந்து செல்கிறோம்.ஹம்பியை பற்றி தெரிந்து கொள்ள, ஒரு வழிகாட்டியை நியமித்துக் கொண்டோம். அவரும் இங்குள்ள சிறப்புகள், வரலாறு, ஆட்சி நடத்திய மன்னர்கள் என, அனைத்து விஷயங்களை பற்றியும் விவரித்தார். ஆண்டுக்கு ஒரு முறையாவது வருகிறோம். தற்போது நாங்களும் ஹம்பிக்கு வழிகாட்டியாக இருக்கிறோம்.

அனுபவம் பகிர்வு

மாவட்ட நிர்வாகம் வழிகாட்டிகளுக்காக நடத்திய பயிற்சி முகாமில், நாங்களும் பங்கேற்றோம். ஹம்பியை பற்ற பேச, எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமையான விஷயம். எங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம்.எங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு ஹம்பிக்கு செல்லும்படி ஊக்கப்படுத்துகிறோம். விஜய விட்டலா கோவிலின் கல் ரதம் எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.பெண்கள் கோலம் போடுவது, விவசாயிகள் வயலில் பணியாற்றுவது, கிராம மக்களின் எளிமையான வாழ்க்கை, எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. எங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைத்தால், நிரந்தரமாக ஹம்பியில் வசிக்கவும், நாங்கள் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ