உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / தன்னலம் பாராமல் மூதாட்டி குடும்பத்திற்கு உதவிய கலியுக கர்ணன்

தன்னலம் பாராமல் மூதாட்டி குடும்பத்திற்கு உதவிய கலியுக கர்ணன்

பெலகாவி தாலுகா மார்க்கண்டேய நகர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாவினஹோலி கிராமத்தில் வசித்தவர்கள் சித்ராய் - பசவ்வா தம்பதி. இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். தம்பதி கடந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்தனர். இதனால், தம்பதியின் ஒன்பது குழந்தைகளையும் பசவ்வாவின் தாயான ரத்னம்மா சந்துாரா, 65, வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மூதாட்டி கூலி வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வரும் ஊதியத்தை வைத்து, 3 வயது முதல் 24 வயது வரையிலான பேரக்குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். இதில், 24 வயதான சித்தவ்வாவுக்கு திருமணம் முடிந்து விட்டது. மூத்த பேரன் துர்கேஷ் பூஜாரி, 23, இரண்டாவது பேரன் பாலேஷ், 18, ஆகிய இருவரும் கூலி வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை பாட்டியிடம் கொடுத்து குடும்பம் நடத்த உதவி வருகின்றனர். தீப்பெட்டி வீடு இவர்கள் அனைவரும் சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே புகுந்து விடும்; வெயில் அடிக்கும் போது வீடு முழுதும் அனல் வீசும். இப்படிப்பட்ட நிலையில், தன் பேரக்குழந்தைகளுடன் போராடி வரும் மூதாட்டி நிலைமை குறித்து, தன் நண்பர்கள் மூலம், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஆதிசேஷ் நாயக்கிற்கு தெரிய வந்தது. மூதாட்டிக்கு உதவ நினைத்தார். இவரது வருகை மூதாட்டி மற்றும் அவரது பேரக்குழந்தைகளின் வாழ்கையில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. பெலகாவி தாலுகாவை சேர்ந்த ஆதிசேஷ் நாயக்கிற்கு சினிமா துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. இவர், கன்னட நடிகர் 'கிச்சா' சுதீப்பின் தீவிர ரசிகர். அவரை போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என விரும்பினார். இதற்காக, பல வேலைகள் செய்து மூன்று லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தார். இதை வைத்து, ஒரு குறும்படம் எடுக்கலாம் என நினைத்திருந்தார். கஷ்டத்துக்கே கஷ்டம் இந்த சமயத்தில் தான், மூதாட்டியின் நிலைமையை, தன் நண்பர்கள் மூலம் அறிந்தார். அவர்களுக்கு உதவ நினைத்தார். சுயநலம் பாராமல் பொது நலத்துடன் செயல்பட துவங்கினார். தான் கஷ்டப்பட்டு உழைத்த மூன்று லட்சம் ரூபாயை, மூதாட்டி குடும்பத்தினருக்காக செலவு செய்ய முன்வந்தார். முதல் கட்டமாக மூதாட்டியின் வீட்டின் ரிப்பேர் பணிகளை செய்ய முடிவெடுத்தார். இப்பணிகள் கடந்த 15ம் தேதி துவங்கின. வீட்டின் சுவர், மேற்கூரைகள், சமையலறை என பல பணிகள் செய்யப்பட்டது. பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகள் அனைத்தையும், ஆதிசேஷ் நாயக் உடனிருந்து கவனித்தார். வீட்டுக்கு வண்ணம் பூசுதல், வயரிங் பணிகள் செய்ய வேண்டி உள்ளது. ஆனந்த கண்ணீர் இதை பார்த்து மூதாட்டி ரத்னம்மா ஆனந்த கண்ணீர் வடித்தார். யாரோ ஒருவர் வந்து, தனக்கு வீடு கட்டி கொடுத்ததை நினைத்து மன நிறைவு அடைந்தார். இது குறித்து, அவர் கூறுகையில், ''எனது கஷ்டங்களை பார்த்து, என் பேரன் போன்று உள்ள ஆதிசேஷ் உதவி வருகிறார். அவர் நன்றாக இருக்க வேண்டும். எனக்கு அரசின் கிரஹலட்சுமி பணம் கூட கிடைக்கவில்லை. அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி