உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / அமெரிக்கா பறக்கும் மங்களூரு விநாயகர்

அமெரிக்கா பறக்கும் மங்களூரு விநாயகர்

விநாயகர் பண்டிகை என்பதால், சிலைகளுக்கு ஆர்டர் குவிகிறது. சிலை தயாரிக்கும் கலைஞர்களும் விதவிதமான விநாயகர் சிலைகளை தயார் செய்து, விற்பனைக்கு வைத்துள்ளனர். மங்களூரில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிலைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் தயாரான விநாயகர் சிலை கடல் கடந்து, அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. மங்களூரின் மன்னகுட்டா கிராமத்தில் வசிக்கும் ராமசந்திர ராவ் குடும்பத்தினர் தயாரிக்கும் விநாயகர் சிலைகளுக்கு, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பேரப்பிள்ளைகள் மன்னகுட்டாவில், 96 ஆண்டுக்கு முன்பு, ராமசந்திர ராவின் தந்தை மோகன் ராவ், சிலை தயாரிக்கும் தொழிலை துவக்கினார். அதன்பின் இவரது குடும்பத்தினர், நான்கு தலைமுறைகளாக சிலை தயாரிப்பில் பிரசித்தி பெற்றுள்ளனர். மோகன் குமாரின் நான்கு மகன்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப்பிள்ளைகள் இதே தொழிலை தொடர்கின்றனர். மாநிலத்தின் பல இடங்களுக்கும் சிலைகளை அனுப்புகின்றனர். மங்களூரை சேர்ந்த ஷர்லேகர் என்பவர், தன் குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கிறார். இவரது குடும்பத்தினர் ஒவ்வோர் ஆண்டும், விநாயகர் சதுர்த்தியை, மிகவும் பக்தியுடன் கொண்டாடுகின்றனர். 28 ஆண்டுகளாக தங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட, தன் சொந்த ஊரான மங்களூரின், மோகன் ராவ் குடும்பத்தினர் தயாரிக்கும் சிலைகளையே பயன்படுத்துகிறார். ஒரு அடி உயரமான விநாயகர் சிலையை கேபின் பாக்சில் வைத்து, பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. கடல் தாண்டி அமெரிக்காவுக்கு சென்ற விநாயகர் சிலை, ஷர்லேகர் குடும்பத்தினரை அடையும். ஆகஸ்ட் 27ம் தேதி, ஷர்லேகர் குடும்பத்தினர், சிலைக்கு மிக சிறப்பாக பூஜைகள் நடத்தி, பண்டிகை கொண்டாடுவர். இதுகுறித்து, மோகன்ராவ் குடும்பத்தினர் கூறியதாவது: பாரம்பரியமாக சிலை தயாரிக்கும் தொழில் செய்கிறோம். சம்பிரதாயப்படி நாங்கள் சிலைகள் தயாரிக்கிறோம். ரசாயனம் பயன்படுத்துவதில்லை. இயற்கையான நிறங்களை பயன்படுத்தி, கைகளால் சிலைகளே உருவாக்குகிறோம். கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவின், கலிபோர்னியாவுக்கு சிலை அனுப்புகிறோம். பாதுகாப்பு கலிபோர்னியாவிலேயே விநாயகர் சிலை கிடைக்கிறது என்றாலும், மங்களூரில் இருந்தே சிலை வாங்குகின்றனர். சிலைக்கு சேதம் ஏற்படாமல், உடையாமல் பாதுகாப்பாக பேக்கிங் செய்து, அனுப்பி வைத்துள்ளோம். நாங்கள் தயாரிக்கும் சிலைகள் கலை வடிவம் கொண்டவை. அமெரிக்காவுக்கு ஒரு அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை, ஏற்றுமதி செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !