உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / ஆர்வத்துடன் கல்வி கற்கும் முதியோர்

ஆர்வத்துடன் கல்வி கற்கும் முதியோர்

- நமது நிருபர் -: கல்விக்கு எல்லையே இல்லை. வாழ்க்கை முழுதும் கற்று கொண்டே இருக்கலாம். கல்வி கற்றவர்கள் அறிவாளிகளாக இருப்பர். சொத்துகள் மற்றும் பணத்தை திருடலாம். ஆனால், ஒருவரிடம் உள்ள கல்வியை, யாராலும் திருட முடியாது. ஆனால், பல காரணங்களால், இளம் வயதில் கல்வி கற்க முடியாதவர்களின் நலனுக்காக, முதியோர் கல்வி திட்டம் துவங்கப்பட்டது. இதை பயன்படுத்தி லட்சக்கணக்கானோர் பயன் அடைகின்றனர். தாவ ணகெரே மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் முதியோர் கல்வி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. முதியோருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 76,552 பேர் படித்த வர்களாக மாறியுள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது, குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மூத்த குடிமக்கள், கல்வி கற்றவர்களாக மாறியதில், கல்வித்துறை ஊழியர்களின் உழைப்பும் அடங்கியுள்ளது. மூத்த குடிமக்கள் மட்டுமின்றி, நடுத்தர வயது ஆண், பெண்களும் கூட ஆர்வமாக கல்வி கற்கின்றனர். இது, அவர்களுக்கு புது வாழ்வை அளித்துள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஏழ்மை, குடும்ப பொறுப்பு போ ன்ற காரணங்களால், பலராலும் சிறு வயதில் கல்வி கற்க முடிவதில்லை. படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், கல்வி கற்க முடியாதவர்களுக்காக மாநில அரசு, முதியோர் கல்வி திட்டத்தை செயல்படுத்தியது. தாவணகெரே மாவட்டத்தில், ஆங்காங்கே கல்வி மையங்கள் திறந்து, வயதானவர்களுக்கு கல்வி அளிக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில், மாவட்டத்தில் கல்வி அறிவு இல்லாத, 104 கிராமங்களில், 76 ஆயிரத்து 552 பேர், இன்று கல்வி கற்றவர்களாக மாறியிருப்பது, மகிழ்ச்சியான விஷயமாகும். குறிப்பாக, இவர்களில் பெண்களே அதிகம். வயதானவர்களுக்கு கல்வி கற்பிக்க, கல்விக்கு தேவையான பொருட்கள் வாங்க, தேர்வு நடத்த, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது உட்பட, இத்திட்டத்துக்கு இரண்டு ஆண்டுகளில், 1.20 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஒவ்வொரு கல்வி மையத்துக்கும் புத்தகங்கள்அனுப்பப்படுகின்றன. கல்வி கற்க வருவோருக்கு நோட்டு புத்தகம், பென்சில், ரப்பர் உட்பட, தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரு கல்வி மையத்தில், 20 பேர் படிக்கின்றனர். ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர். படித்தவர்கள், படிக்காதவர்களுக்கு கல்வி கற்றுத்தர வேண்டும். கல்வி கற்க வருவோருக்கு வசதியாக மாலை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் கிராமப்பகுதிகளில் அதிகமானோர் கல்வி கற்க, உதவியாக உள்ளது. ஆனால், சிலர் இந்த வயதில், எதற்காக படிக்க வேண்டும் என, அலட்சியம் காட்டுகின்றனர். இவர்களுக்கு கல்வியின் மகத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கல்வி கற்க, வயது ஒரு தடையே அல்ல. எந்த வயதிலும் படிக்கலாம். நடப்பாண்டு ஜகளூரு பட்டணம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மாலை வகுப்புகள் நடத்த அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் வகுப்புகள் துவக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை