உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / பார்வையற்றோரின் ஞான ஒளியான ஸ்ரீராக்கும் பள்ளி

பார்வையற்றோரின் ஞான ஒளியான ஸ்ரீராக்கும் பள்ளி

இத்தகையோர் கலெக்டர் உட்பட உயர் பதவிகளிலும் உள்ளனர். இத்தகையவர்களுக்காக ஏராளமான சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. பெங்களூரிலும் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஒரு பள்ளி விளங்குகிறது.பெங்களூரின் இந்திராநகர் 1வது ஸ்டேஜ் ஸ்ரீ கிருஷ்ணா கோவில் சாலையில் உள்ள ஸ்ரீராக்கும் பள்ளி. பார்வையற்ற, பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, இலவசமாக கல்வியை இப்பள்ளி வழங்குகிறது.கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளியில், எல்.கே.ஜி., முதல் பி.யு.சி., வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த பள்ளியின் கிளை பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியிலும் உள்ளது. இரண்டு இடங்களிலும் சேர்ந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளியின் நிறுவனர் சர்வதேச கராத்தே நிபுணர் காஞ்சா ராக்கும் கூறியதாவது:பார்வையற்ற, பார்வை குறைபாடு உடைய ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இலவசமாக தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் பள்ளியை துவங்கி உள்ளேன். மக்களிடம் நன்கொடை வாங்கித் தான், பள்ளியை நடத்துகிறேன். மத்திய, மாநில அரசுகள், வெளிநாடுகளில் இருந்து யாரும் பண உதவி செய்யவில்லை. ஆங்கில வழியில் தான் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கிறோம். இங்கு படித்த பல மாணவர்கள் உயர்கல்வி படித்துவிட்டு, தற்போது நல்ல நிலையில் உள்ளனர். போட்டி தேர்வு எழுதவும் மாணவர்களை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். பார்வையற்ற மாணவர்கள் இந்த சமூகத்தில், தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவது தான், எங்கள் குறிக்கோள்.பள்ளிக்கு கெம்பே கவுடா, ஞான பங்கரா, அன்னை தெரசா உட்பட பல விருதுகள் கிடைத்து உள்ளன. மாணவர்கள் இங்கேயே தங்கி படிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை பெற்றோரை பார்க்க அனுமதிக்கிறோம். தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98453 01354/ 85538 35250.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !