உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / கலையை வாழ வைக்கும் தங்கம் விளைந்த மண்

கலையை வாழ வைக்கும் தங்கம் விளைந்த மண்

தங்கம் விளைந்த நகரில் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் எந்த காலத்திலும் குறை இருந்ததே இல்லை. நுாற்றாண்டுகளுக்கு முன்னதாகவே, தமிழகத்தைச்சேர்ந்தவர்கள் தங்கவயலில் குடியேறினர். தங்களுடன் நாட்டுப்புற கலைகளையும் கொண்டு வந்தனர்.தெரு கூத்து, கும்மியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் என ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக கலக்குவர். குடியிருப்பு பகுதிகள் தோறும் பல கலை மன்றங்களை ஏற்படுத்தினர். இத்தகைய கலை வாழ்ந்த தங்கவயலில் காலப்போக்கில் மறைந்து விடுமோ என்ற எண்ணம் தோன்றியிருக்கலாம்.

14 ஆண்டுகள் பயற்சி

ஆனால், பழமையும், புதுமையும் கலந்த 'நவீன நடன கலை பயிற்சி மையம்' தங்கவயலில் உள்ளது. தங்கவயல் கோரமண்டல், மாடல் ஹவுஸ் பகுதியில் கிரண் ஜாக்கி என்ற நடன ஆசிரியர், தன் சிறிய வயதிலேயே, நடன பயிற்சி பெற்றவர். கடந்த 14 ஆண்டுகளாக இதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றார்.இவர் துபாய், புதுடில்லி, சென்னை, ைஹதராபாத் பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் தன் நடன கலைகளை வெளிபடுத்தி சாதனைகள் படைத்துள்ளார். இவர் ராபர்ட்சன்பேட்டை சொர்ணகுப்பம் 6 வது கிராஸ் பகுதியில் நடன பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றார். 3 வயதும், அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண், பெண் அனைவருக்கும் நடன பயிற்சி அளித்து வருகின்றார்.இது குறித்து அவர் கூறுகையில், ''நடன பயிற்சியால் உடல் 'பிட்னஸ்', ஸ்டைல், ஒழுக்கம், சுறுசுறுப்பு, சோர்வு நீங்க பெரிதும் உதவும். எதிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இதன் மூலம் உணரலாம்.நடன பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும்; மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும்; ஆண்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரையில் இரவு 7:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தவிர யோகா, சிலம்பு, ஜிம்னாஸ்டிக்கிற்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது,'' என்றார்.

நடிப்பு பயிற்சி

இவரிடம் 6 மாதம், 9 மாதம், ஒரு ஆண்டு என பயிற்சி அளிக்கப்படுகிறது. கிளாசிக்கல், வெஸ்ட்ரன் உட்பட 'ப்ரீ ஸ்டைல் ஆல்' ஓப்பன் ஸ்டைல் என பல நடன வகுப்புகள் உள்ளன. இதில் அனைத்து வகையான நடனமும் அடங்கும். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நடன பயிற்சி அளித்து வருகிறார். நடிப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.இத்தகைய இளைஞர்கள் தங்கவயலில் பலர் உள்ளதால், 'கலை வாழும் தங்கவயல்' என்ற பெருமைக்கு குறையில்லை. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை