உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / அழகு / கண்களின் மேக்கப் கலைவதில்லை…குறைவதில்லை !

கண்களின் மேக்கப் கலைவதில்லை…குறைவதில்லை !

மழைக்காலமோ, கோடைக்காலமோ... எந்த சீசனா இருந்தாலும், நாம போடுற மேக்கப் கொஞ்சமாவது கலையாம இருக்கணும்னுதான், எல்லா பொண்ணுங்களும் நினைப்பாங்க. இதுக்கு தீர்வா இப்போ ‘லாக்-டைட் ஐஸ்’  என்ற புதிய கண் அலங்கார முறை பேமஸ் ஆகிட்டு வருது என்கிறார், அழகுக்கலை நிபுணர் ரம்யா. அவர் கூறியதாவது: ரொம்ப கம்மியான மேக்கப் வச்சு, கண்களை இயல்பாகவும் நீண்ட நேரம் அழகாகவும் வச்சிருக்கிறதுதான் இதோட சிறப்பு. முதல்ல கண் பகுதியில எண்ணெயோ, ஈரப்பதமோ இல்லாத அளவுக்கு சுத்தமா தொடைச்சிட்டுதான் மேக்கப்பை தொடங்கணும். அப்புறம், வாட்டர் புரூப் காஜலை இமை ஓரத்துல லேசான கோடா போடணும். அதுக்கு மேல ‘ஸ்மட்ஜ்-புரூப்’ மஸ்காராவை பயன்படுத்தணும். அவ்வளவுதான். மேக்கப் முடிச்சதும் கண்களை சுத்தி கொஞ்சமா ‘டிரான்ஸ்லூசென்ட்’ பவுடர் தடவுனா, அதிக எண்ணெயை அது உறிஞ்சிடும். அப்புறம், ஐ மேக்கப் பண்றதுக்கு முன்னாடி அதிக எண்ணெய் பசை இருக்கிற ஐ க்ரீம்களை பயன்படுத்துறதை தவிர்க்கிறது ரொம்ப நல்லது. ரொம்பவே எளிமையான இந்த ‘லாக்-டைட் ஐஸ்’ ட்ரெண்ட் ஆபீஸ், காலேஜ், விசேஷங்கள்னு நாள் முழுக்க வெளியில போறவங்களுக்கு ஒரு செம சாய்ஸ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை