உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / நிகழ்வுகள் / ஓடிடி தளத்தில் இந்த வார ரிலீஸ்: உங்கள் பேவரைட் மூவி இருக்கா?

ஓடிடி தளத்தில் இந்த வார ரிலீஸ்: உங்கள் பேவரைட் மூவி இருக்கா?

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல ஓடிடி தளங்கள் உதவி செய்கின்றன. இவை வந்த பிறகு தியேட்டர் இல்லாத கிராமங்கள் இல்லை என்ற அளவிற்கு,சினிமா ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்களின் பட்டியலை அறிந்து கொள்வோம்.

டைனோசர்ஸ்

நடிகர் உதய் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கும் கேங்ஸ்டர் படம் 'டைனோசர்ஸ்'. இதில் உதய் கார்த்திக்கு ஜோடியாக சாய் ப்ரியா தேவா நடித்துள்ளார்.இந்த படத்தை இயக்குநர் மாதவன் இயக்கியுள்ளார்.மேலும், மிக முக்கிய ரோல்களில் ஸ்ரீனி, மணிக்ஷா, கவின் ஜெயபாபு, ஜானகி சுரேஷ், யாமினி சந்தர், ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் பிரபல ஓடிடி தளமான 'சிம்ப்ளி சவுத்'ல் ரிலீஸாகியுள்ளது.

வெப்

நட்டி என்கிற நடராஜ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'வெப்'. இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஹரூன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஷில்பா மஞ்சுநாத், மொட்ட ராஜேந்திரன், முரளி, அனன்யா மணி, ஷாஸ்வி பாலா, சுபப்ரியா மலர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் பிரபல ஓடிடி தளமான 'சிம்ப்ளி சவுத்'ல் ரிலீஸாகியுள்ளது.

மால்

இயக்குநர் தினேஷ் குமரன் இயக்கியுள்ள படம் 'மால்'. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அஸ்ரஃப், விஜே பப்பு, ஜெய், சாய் கார்த்தி, கௌரி நந்தா, தினேஷ் குமரன், எஸ்.பி.கஜராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பிரபல ஓடிடி தளமான 'ஆஹா'வில் ரிலீஸாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி