உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / பேஷன் / பேஷன் உலகில் திரும்பி வந்த டிரெண்ட்!

பேஷன் உலகில் திரும்பி வந்த டிரெண்ட்!

ஒ ரு காலத்தில் இளம் பெண்களின் அடையாளமாக இருந்த பாவாடை தாவணி, இப்போது மீண்டும் ஸ்டைலாக திரும்பி வந்திருக்கிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, இந்த பாரம்பரிய உடை, பெண்களின் பேவரைட் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது என்கிறார், ஆடை வடிவமைப்பாளர் பிரியங்கா. அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் சீருடையாக வலம் வந்தது பாவாடை தாவணி. காலப்போக்கில், இதன் பயன்பாடு குறைந்து, கிட்டத்தட்ட மறைந்தே போனது. அந்த இடத்தை, வட மாநில உடையான 'லெஹங்கா' பிடித்திருந்தது. ஆனால், பழைய பேஷன் புதிய பரிணாமத்தில் திரும்புவது போல, நம்ம ஊர் பாவாடை தாவணி இப்போது டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக, திருமணமான இளம் பெண்கள், இந்த உடையை விரும்பி அணிகிறார்கள். விசேஷங்களின்புதிய ஸ்டார் திருமணம், காதணி விழா போன்ற விசேஷங்களுக்கு, புடவை கட்டுவதை விட, பாவாடை தாவணி அணிவதையே, இன்றைய பெண்கள் விரும்புகின்றனர். இது பாரம்பரிய தோற்றத்தையும், அதே சமயம் ஒருவித மாடர்ன் ஸ்டைலையும் கொடுப்பதே காரணம். முன்பு போல இல்லாமல், இன்று விதவிதமான டிசைன்களிலும், கண்ணைப் பறிக்கும் பட்டு வகைகளிலும், பாவாடை தாவணிகள் சந்தையில் குவிந்துள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை