உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / மொபைல்போன் கதிர்வீச்சு பயன்படுத்துவதில் கவனம்

மொபைல்போன் கதிர்வீச்சு பயன்படுத்துவதில் கவனம்

மொபைல்போன்கள் இன்றைய உலகில் ஒரு அத்தியாவசிய 'கருவியாகி' யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், மொபைல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது. ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது சிறந்தது. கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு, 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே நாம் மொபைல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.முடிந்த அளவு மொபைல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். 'லேண்ட்லைன்' உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் மொபைல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவும். ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் SMS வசதியை உபயோகிக்கவும். குழந்தைகளிடம் மொபைல்போன்களில் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.உங்கள் மொபைல்போனில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் (Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம். காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட மொபைல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.துாங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு துாங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஏற்படுத்தியவுடன் போனை காதின் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் ரிங் போகும் பொழுது, 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது. மொபைல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.மொபைல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. மொபைல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
மே 19, 2026 10:00

இந்த பதிவில் உள்ள சில ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தாலும், பல முக்கியக் கூறுகள் அறிவியல் ஆதாரமின்றி மிகைப்படுத்தப்பட்டவையாகவும் தவறாகவும் உள்ளன. குறிப்பாக “மொபைல் கதிர்வீச்சு மூளைப் புற்றுநோயை உறுதியாக ஏற்படுத்தும்”, “வலது காதில் பேசினால் அதிக பாதிப்பு”, “ரிங் போகும் போது 14 மடங்கு கதிர்வீச்சு” போன்ற கூற்றுகளுக்கு உறுதியான மருத்துவ ஆதாரம் இல்லை. உலக சுகாதார அமைப்பு World Health Organization மற்றும் பல ஆய்வுகள் கூறுவது: மொபைல் போன்கள் radiofrequency RF எனப்படும் non-ionizing radiation வெளியிடுகின்றன. இதுவரை நடந்த பெரிய அளவிலான ஆய்வுகளில், சாதாரண மொபைல் பயன்பாடு நேரடியாக மூளைப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்று உறுதியான ஆதாரம் இல்லை. இருப்பினும், நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதால் தூக்கக் குறைவு, கண் சோர்வு, கழுத்து வலி, கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதே நேரத்தில், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நல்ல பழக்கங்களாக கருதப்படுகின்றன: தேவையற்ற நீண்ட அழைப்புகளை குறைக்கலாம். Speaker mode அல்லது wired earphones பயன்படுத்தலாம். பலவீனமான signal உள்ள இடங்களில் நீண்ட நேரம் பேசாமல் இருக்கலாம் அப்போது phone அதிக சக்தியில் signal தேடும். தூங்கும்போது phone-ஐ தலையணை அருகில் வைக்காமல் சிறிது தூரத்தில் வைக்கலாம். குழந்தைகளின் screen time மற்றும் mobile usage-ஐ கட்டுப்படுத்துவது நல்லது. பயணம் செய்யும் போது mobile gaming அதிகமாக செய்வது கண் சோர்வு மற்றும் motion discomfort ஏற்படுத்தலாம். ஆனால் கீழ்கண்ட கூற்றுகள் தவறானவை அல்லது நிரூபிக்கப்படாதவை: “இடது காதில் மட்டும் பேச வேண்டும்” “Vibrate mode ஆபத்தானது” “ரிங் போகும் போது 14 மடங்கு radiation” “30 நிமிடங்களுக்கு மேல் பேசினால் கண்டிப்பாக cancer” எனவே, பயமுறுத்தும் தகவல்களை விட அறிவியல் ஆதாரமுள்ள தகவல்களை நம்புவது முக்கியம். மொபைல் பயன்பாட்டை சமநிலையுடன் வைத்துக் கொள்வதே சிறந்த பாதுகாப்பு.


ديفيد رافائيل
மே 18, 2026 07:04

​"cell phone radiation ல் இருந்து தப்பிக்க நான் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு எளிய வழியைப் பின்பற்றி வருகிறேன். கூட்டமில்லாத இடங்களிலும், traffic இல்லாத இடங்களில் எப்போதும் லவுட்ஸ்பீக்கர் Loudspeaker ஆன் செய்து, போனை உடம்பில் இருந்து தள்ளி வைத்துத்தான் பேசுவேன். கூட்டமான இடங்களில் லவுட்ஸ்பீக்கர் போட முடியாத பட்சத்தில், 15 வினாடிகளுக்கு மேல் பேச மாட்டேன். போனை காதில் வைப்பதைத் தவிர்த்தாலே 90% radiation ஆபத்தில் இருந்து நம் மூளையையும் உடலையும் காப்பாற்றலாம். இதைப் அனைவரும் பின்பற்றலாம்"


ديفيد رافائيل
மே 18, 2026 06:46

​"போன் ரிங் ஆகும் போது காதில் வைக்கக் கூடாது, ஸ்பீக்கர் அல்லது ஹெட்போன் பயன்படுத்த வேண்டும் போன்ற ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவை. தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் வளர்கிறது. காசு சம்பாதிப்பதை விட ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை உணர்ந்து, உழைக்கும் மக்கள் அனைவரும் மொபைல் பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும்."


ديفيد رافائيل
மே 18, 2026 06:46

​"Network signal குறைவாக இருக்கும் இடங்களில் கதிர்வீச்சு Radiation 14 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கட்டுரை கூறுகிறது. ஆனால், பல நிறுவனங்கள் தங்களின் டவர் கட்டமைப்பைச் சரியாகப் பராமரிப்பதில்லை. சிக்னல் கிடைக்காமல் போன் திணறும் போது கதிர்வீச்சு இன்னும் அதிகமாகிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. லாபத்தை மட்டும் பார்க்காமல், தரமான சிக்னல் சேவை வழங்க நிறுவனங்கள் முன்வர வேண்டும்."


ديفيد رافائيل
மே 18, 2026 06:44

​"இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட தொழில் செய்ய முடியாது. குறிப்பாக எல்லா online டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் field work செய்பவர்கள் 24 hours 5G internet, signal, map என்று மொபைலைத் தான் சார்ந்துள்ளார்கள். கதிர்வீச்சு ஆபத்து என்று தெரிந்தாலும், பிழைப்புக்காக இதைத் தவிர்க்க முடியாதது சாபக்கேடு"


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை