ரத்த தானம் செய்வது உடலை பலவீனமாக்குமா?
உலக ரத்ததான தினம் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு மிகச்சிறிய அளவில் கொண்டாடப்பட்டது. பின்னர், 2005ஆம் ஆண்டு 58ஆவது உலக சுகாதார சபை கூட்டத்தின் போது உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் இந்த தினத்தை கடைபிடிக்க முடிவெடுத்தன.அப்போது முதல் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததான தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.ஜூன் 14ஆம் தேதி என்பது ஆஸ்திரிய உயிரியலாளர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த தினம். இவர் நவீன ரத்த மாற்று நடைமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ரத்த வகை பிரிவுகளை உருவாக்கியதற்காக 1930ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.மனிதர்களின் ரத்தத்தை ஏ,பி, ஏபி, ஓ ஆகிய பிரிவுகளில் முதன்முதலில் வகைப்படுத்திய இவரது ஆராய்ச்சிகள், ஒரே ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இடையே ரத்த மாற்று சிகிச்சை முறைக்கு வழிவகுத்தது.நீங்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் உள்ளன. அதற்கான வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனமும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பும் வகுத்துள்ளது.ரத்ததானம் குறித்த தெரியாத தகவல்கள்
* ரத்த தானம் செய்பவரின் வயது, 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம். ரத்த ஹிமோகுளோபின் அளவு, 12 கிராமிற்கு குறையாமலும், 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.* ரத்த தானம் செய்வபரின் எடை, 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் ரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள். எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.* கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்:
ரத்தப் பிரிவு, ரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு ரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. ரத்த தானம் செய்வது பிறர் நலன் காப்பதற்கு மட்டுமல்ல, தன் நலன் மேம்படுவதற்கும் உதவும். ரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய ரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என, கண்டறியப்பட்டுள்ளது. ஹிமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் ரத்த தானம் பயன்படுகிறது. ரத்த தானம் செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. எனவே ரத்ததானம் செய்வோம்; பலன் அடைவோம்.ரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின் விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.