உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / வாந்தி ஏற்பட காரணம் என்ன?

வாந்தி ஏற்பட காரணம் என்ன?

வயிற்றில் உண்டாகும் அழுத்தம் காரணமாக உணவுக்குழல் வழியாக பின்னோக்கி தள்ளப்பட்டு வாய் வழியாக வெளியேறும் செரிமானமாகாத உணவின் மிச்சம்தான் வாந்தி எனப்படுகிறது. இதனால் ஏற்படும் அசூசை நம்மை நாள் முழுக்க அலைக்கழிக்கும் என்பதால் பெரும்பாலும் வாந்தி எடுப்பதை நாம் வெறுப்போம். வாந்தி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இவை என்னென்ன, யார் யாருக்கு ஏற்படும் என ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

நாம் சாப்பிடும்போது உணவுக்குழல் வழியாக வயிற்றுக்குள் செல்லும் உணவு வயிற்றுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தினால் மூளையின் உத்தரவுப்படி உணவுக்குழல் செயல்படும் முறை திசை திருப்பப்பட்டு வயிற்றில் உள்ள உணவு மீண்டும் வாய் நோக்கிச் செல்லும். இந்த உணவு வயிற்றில் இருந்து புவி ஈர்ப்பு விசைக்கெதிராக மேலே செல்ல வயிற்றுக்கு மேல்நோக்கி அழுத்தம் கொடுக்க மூளை கட்டளையிடும். இந்த அழுத்தம் காரணமாக சில விநாடிகளில் நாம் உண்ட செரிமானமாகாத உணவு வாந்தியாக வெளியே வாந்தடையும். துரித உணவு உண்பவர்கள், வெறும் வயிற்றில் மது அருந்துபவர்கள் ஆகியோருக்கு இதுபோன்ற ஒவ்வாமை அடிக்கடி உண்டாகி வந்திவரும்.வயிற்றில் அல்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கு சாப்பிட்டவுடன் வாந்தி ஏற்படும்.கர்ப்ப காலத்தில் கருப்பையில் உள்ள நஞ்சில் கரு வளரத் தேவையான ஹுயூமன் கோரியோனிக் கொனடோட்ரோஃபின் (human chorionic gonadotropin) எனப்படும் ஹார்மோன் சுரக்கும். இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்படும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு செரிமான தாமதம் காரணமாக வாந்தி ஏற்படும். மலக்குடலில் மல நகர்வுக்குத் தடை உண்டானால் வாந்தி ஏற்படலாம். கெட்டுப்போன உணவு துர்நாற்றத்தை நுகர்ந்தால் வாந்தி வரும் உணர்வு ஏற்படலாம். அவற்றை நாம் சாப்பிட்டால் வயிற்று ஒவ்வாமை ஏற்படும் என்பதால் மூளையில் உத்தரவுப்படி அதனை சாப்பிடாமல் தவிர்க்க இந்த உணர்வு உண்டாவது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு பால் பொருட்கள் ஒவ்வாமை காரணமாக வாந்தி வரக்கூடும்.எண்பது வயதைக் கடந்த வயோதிகர்களுக்கு உணவு செரிமானக் கோளாறு, வாயுப்பிடிப்பு இருந்தால் வாந்தி வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ