உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் சூளகெரே ஏரி 

சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் சூளகெரே ஏரி 

தாவணகெரே என்றதும் கர்நாடகாவில் வசிப்பவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது, வெண்ணெய் தோசை தான். அந்த தோசையை சாப்பிட, காரை எடுத்து கொண்டு பெங்களூரில் இருந்து லாங் டிரைவ் சென்றவர்களும் உண்டு. தாவணகெரே வெண்ணெய்க்கு மட்டும் பேமஸ் இல்லை. சுற்றுலா தலங்களுக்கும் பேமஸ் தான். அங்கு ஏராளமான கோட்டைகள், ஏரிகள் உள்ளன. அதில் ஒரு ஏரியை பற்றி பார்க்கலாம்.தாவணகெரேயின் சென்னகிரி தாலுகா, கெரேபீலச்சி கிராமத்தில் உள்ளது சாந்தி சாகர் ஏரி. ஆனால் இந்த ஏரியை சூளகெரே ஏரி என்று தான் அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணியரும் அழைக்கின்றனர். ஆசியாவின் 2வது பெரிய ஏரி என்ற பெயரும் இதற்கு உண்டு. இந்த ஏரி 800 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றை கொண்டது. 6,550 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் ஏரியில், தண்ணீர் முழுமையாக தேங்கும் போது கடல் போல ரம்மியமாக காட்சி அளிக்கும்.ஏரியை சுற்றி இருபக்கமும் மலை பகுதி உள்ளது. பச்சை, பசலேன காட்சி அளிக்கும் மலைகளை பார்க்கவும் ரம்மியமாக இருக்கும். இந்த ஏரியின் தண்ணீர் தான் சித்ரதுர்கா, தாவணகெரேயில் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்திற்காக 2 கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.ஏரி அருகில் குறுகிய சாலை செல்கிறது. அந்த சாலையில் வாகனங்களில் பயணித்து கொண்டே ஏரியை பார்ப்பதும், வாகனங்களுக்குள் இருந்து புகைப்படம் எடுப்பதும் புதுமையான அனுபவமாக இருக்கும். ஏரியை ஒட்டி மணல் மேடு போன்ற இடம் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்தும் ஏரியின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம். புகைப்படம் எடுத்தும் மகிழலாம். மாலை நேரத்தில் ஏரிகரையில் நின்று சூர்ய அஸ்தமனத்தை பார்க்கும் வாய்ப்பும் உண்டு. குடும்பத்தினருடன் பொழுது போக்கவும் ஏற்ற இடமாகவும் உள்ளது.பெங்களூரில் இருந்து சென்னகிரிக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னகிரி சென்று அங்கிருந்து கெரேபீலச்சி கிராமத்தை சென்றடையலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை