மேலும் செய்திகள்
வின்டேஜ் கார்கள் கண்காட்சி
27-Sep-2025
தசரா முடிந்து ஒரு வாரமாகியும், மைசூரில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறையவில்லை. தசரா சூழல் மாறவில்லை. சாமுண்டி மலை, மிருகக்காட்சி சாலை, அரண்மனை உட்பட, பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணியர் குவிகின்றனர். மர பொம்மைகள், மண் பொம்மைகள், பீங்கான், கண்ணாடி என, பல்வேறு பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை கண்காட்சிகளில் காணலாம். மைசூரில் துவக்கப்பட்டுள்ள கண்காட்சி மிகவும் அரிதானது. காகிதங்களால் உருவாக்கப்பட்ட பொம்மைகள், மைசூரின் இஞ்சரா கலா மந்திரில், கலை ஆர்வலர்களை கவரும் காகித பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. பிரபல கலைஞர் ராகவேந்திரா, 75, மூன்று ஆண்டுகள் உழைத்து, காகித பொம்மைகளை தயாரித்தார். காகிதத்தால் தயாரிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட அழகான பொம்மைகள், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. சீனிவாச கல்யாணம், தசாவதாரம், கிருஷ்ண லீலை, ராமர் வனவாசம் உட்பட, பல காட்சிகளை காகித பொம்மைகள் மூலம், கண் முன்னே கொண்டு வந்துள்ளார். குழந்தைகள், பெரியவர்கள் என, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். தீபாவளி வரை கண்காட்சி இருக்கும். கட்டணம் கிடையாது. சுற்றுலா பயணியர், பொது மக்கள் அதிகமாக வருகின்றனர். ஒவ்வொரு பொம்மையும், கலைஞர் ராகவேந்திராவின் கைவண்ணத்தை காட்டுகிறது. ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். காகிதத்துக்கு இவ்வளவு அழகான வடிவம் கொடுக்க முடியுமா என, வியக்கின்றனர். காகித பொம்மைகள் கண்காட்சி குறித்து, கூடுதல் தகவல் வேண்டுவோர், 98867 64542, 98867 21171 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -
27-Sep-2025