உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / தமிழகத்தில் பார்க்க வேண்டிய சில கடற்கரைகள் !

தமிழகத்தில் பார்க்க வேண்டிய சில கடற்கரைகள் !

பாரம்பரியமான கோவில்கள், அழகிய மலைவாசஸ்தலங்கள் என பல அம்சங்களும் நிறைந்ததாக தமிழகம் உள்ளது. இங்குள்ள கடற்கரைகள் இந்த கோடைக்கு குளிர்ச்சியான பொழுதுபோக்கு மட்டுமின்றி சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள சில கடற்கரைகளை பார்க்கலாம்...

தனுஷ்கோடி கடற்கரை

தமிழகத்தின் கைவிடப்பட்ட கடற்கரை நகரமான தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ளது. இதன் பெயரைப் போன்றே தமிழகம் அல்லது இந்தியாவின் கடைக்கோடியில் உள்ளது. இது 1964ம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளிப் புயலால் அழிந்த நிலையில், இன்று பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாக உள்ளது. புயலின் அடையாளமாக சிதிலமடைந்த தேவாலயமும், இன்னும் சில கட்டடங்களின் மீதியும் இங்கு எஞ்சியுள்ளன. மிகவும் பிரபலமான சுற்றுலா தலமான இந்த தனுஷ்கோடி கடற்கரைக்கு, உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

மெரினா கடற்கரை

சென்னை சென்றாலே மெரினா கடற்கரைக்கு விசிட் அடிக்க வேண்டும் என்பது பலரின் தீராக்கனவு. இது உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகும். மெரினா கடற்கரையில் ஏராளமான உணவு ஸ்டால்கள் உள்ள நிலையில், விதவிதமான தமிழக உணவுகளை சுவைக்கலாம். கலங்கரை விளக்கத்துக்கு சென்று கடல் மற்றும் நகரத்தின் உச்சியில் இருந்து பார்ப்பது இனிமையான அனுபவம்.

ஆரோவில் கடற்கரை

பாண்டிச்சேரி நகரிலிருந்து 12 கி.மீ., தூரத்தில் உள்ள ஆரோவில் கடற்கரை சற்று அமைதியாக நேரத்தை செலவிடும் இடமாகும். இங்கே நீல நிறத் தண்ணீரையும், முழுமையான அழகையும் பார்த்து மகிழலாம். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்துக்கு கடற்கரை ஒரு சிறந்த இடமாகும். அடிக்கும் கோடை வெயிலை சமாளிக்க குட்டீஸ்களுடன் ஜாலியாக சென்று மகிழலாம்.

தரங்கம்பாடி கடற்கரை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் தரங்கம்பாடி அல்லது டிரான்குபார், பாடும் அலைகளின் இடமாகும். இது ஒரு முன்னாள் டேனிஷ் காலனி மற்றும் அதன் காலனித்துவ கட்டடக்கலை, அழகான கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது. 1620ல் கட்டப்பட்ட அழகிய டான்ஸ்போர்க் கோட்டை இன்னும் கம்பீரமாக சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு உள்ளது.

கன்னியாகுமரி கடற்கரை

வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் சந்திக்கும் இடமாக கன்னியாகுமரி உள்ளது. சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்க்க ஏராளமானவர்கள் இங்கு குவிவர். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் காந்தி நினைவகம் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இங்கு உள்ளன.

பூம்புகார் கடற்கரை

பூம்புகார் வரலாற்று ரீதியாக காவேரிபூம்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இது சிதம்பரம் மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தில் புனித நதியான காவிரி வங்காள விரிகுடாவுடன் கலக்கிறது. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் ​​பூம்புகார் முக்கிய துறைமுகமாக இருந்தது. சிலப்பதிகார கலைக்கூடம், தேவாலயம் மற்றும் டச்சு கட்டடக்கலை நினைவுச்சின்னங்கள் ஆகியவை பூம்புகார் கடற்கரையில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை